கள்ளி
என்பது பெரும்பாலும் முள்ளுள்ள நிலைத்திணை
(தாவர) வகை.
தேக்குப்போல்
அகிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
விளைவதாகும்.
"குடமலைப்
பிறந்த ஆரமும் அகிலும்" |
(பட்டினப். 188)
|
என்றது, உள்நாட் டகிலை.
"வங்க
ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்" |
என்றது கீழ்நாட் டகிலை.
பண்டைக்
காலத்தில் இங்கிருந்து மேனாடுகட்கு ஏற்றுமதி
யான பொருள்களுள் அகிலும் ஒன்றாம். அது தமிழ்வணிகமே யன்றி
ஆரிய வணிகமன்று.
அக்கு
= அகில் (மலை.). அக்கிலு = நெருஞ்சி (மூ. அ.)
அக்கு
- (அக்கில்) - அகில். ம. அகில்.
Heb.
ahalim, Gk. agallochon, L.aquillaria, E.eaglewood, Skt.agru.
மேலை
மொழிகளிலெல்லாம் லகர வடிவும், வடமொழியில் அதன்
திரிபான தகரவடிவும் இருத்தலை நோக்குக.
மானியர்
வில்லியம்சு அகரமுதலியில் agaru என்பதை aguru
என்றும் காட்டிப் பளுவில்லாதது (not heavy) என்று சொற்
பொருட் கரணியங் குறித்திருப்பது, அவர் சொந்தக் கைவரிசையே.
அகோ - அஹோ
அகோ
என்பது மகிழ்ச்சி, வியப்பு, இரக்கம், துயரம் முதலிய
உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொல். இது அக்கை என்னும்
முறைப்பெயரின் விளிவேற்றுமையாம்.
அக்கை
- அக்கா, அக்கோ - அகோ.
ஒ.நோ
: |
ஐயன்
- ஐயோ!
அத்தன் - அத்தோ! - அந்தோ!
அத்தன் - அச்சன் - அச்சோ!
அம்மை - அம்மோ! அம்மவோ!
அன்னை - அன்னோ!. |
|