ஒ.நோ
: கட்டல் (கள் + தல்) என்னும் வினை வழக்கற்றபின்
களவுசெய் என்பது முதனிலையாய் வழங்குதல் காண்க.
அட்டம1
- அட்டம் (boiled rice)
அடு
- அடுசில் - அடிசில். அடு - அட்டம். அடுதல் = சமைத்தல்.
அட்டம2
- அட்ட (high. lofty)
எட்டு
- எட்டம் = உயரம். எட்டம் - அட்டம்.
அட்டம் - அட்டஸ் (வ.) = மதில்மேற் காவற்கூடம்.
அட்டாலை - அட்டால
அட்டம்
+ ஆலை = அட்டாலை = மதின்மேற் காவற்கூடம் அல்லது
கோபுரம். சாலை - ஆலை.
"கீழ்பா
லிஞ்சி யணைய வட்டாலை கட்டு" |
(திருவாலவா.20
: 10)
|
அட்டாணி
= அட்டாலை.
"தலையெடுப்பாக
வுயர்ந்த அட்டாணியும்" |
(இராமநா.
சுந்.3)
|
ஆரியர்
வருமுன்பே, பல்வகை யரணுறுப்புகளைக் கொண்ட
கோட்டை கொத்தளங்கள் தமிழகத்திலிருந்தன.
அட்டாலை
- அட்டாளை(யா)
அடக்கம் - டக்கா
(dh)
அடக்கம்
= அடங்கிய ஓசையுடைய தோற்கருவி.
"நிசாளந்
துடுமை சிறுபறை யடக்கம்" |
(சிலப்.
3 : 27, உரை)
|
அடவி - அடவீ ()
அடு
- அடர் - (அடர்வி) - அடவி = மரமடர்ந்த சோலை அல்லது
காடு. இனி, அடு - அடவி என்றுமாம். அடுத்தல்= நெருங்குதல்,
சேர்தல், அடர்தல்.
வடமொழியாளர்
காட்டும் சொற்பொருட் கரணியம் வருமாறு:
அட்
= திரி (to roam), அலை (to wander about). அடவீ=
திரியுமிடம் (place ot roam in), மரமடர் காடு
(forest).
அடு - அச் (இ.வே.)
அடுத்தல்
= நெருங்குதல், அடைதல்.
|