அள்-அண்-அடு-(அசு)-ஆசு.
அள் = பற்றிரும்பு.
ஆசு-ஆசி.
ஆசித்தல்=அவாவுதல்.
வடவர்
ஆசா என்னும் சொல்லை ஆ- சா எனப் பகுத்து, ஆ
- சம்ஸ் என்பதன் வழிப்பட்டதாகவும் ஆ - சஸ் என்பதன் திரிபாகவுங்
காட்டி, விரும்பு, எதிர்பார் என்று பொருள் கூறுவது பொருந்தாது. சம்ஸ்
= ஒப்பி, புகழ், சொல், முன்விளம்பு, சூளிடு.
கட்டம்-கஷ்ட
கடு-கடுமை
= வன்மை, வருத்தம், செயற்கருமை.
கடு-கட்டம்.
ஒ.நோ: அடு -அட்டம், கொடு-கொட்டம்,
அறு-அற்றம்,
செறு-செற்றம்.
வடமொழியில்
மூலமில்லை. ஒருகால் கஷ் என்பதன் இறந்தகால
வினையெச்சமா யிருக்கலாமென்று மா.வி.அ. கூறும். கஷ் = தேய்,
சுறண்டு, சேதப்படுத்து (பா.); சேதப்படுத்து, கொல், அழி (தாது).
கருமம்-கர்மன்
(இ.வே.)
கருமம்,
கர்மன் என்னும் இருசொல்லும் செய்கை, வினை, தொழில்
என்று பொருள்படும் ஒரே சொல்லின் இருவேறு வடிவுகளே. கருமம்
என்பதனொடு தொடர்புடைய கருவி என்னும் சொல் வடமொழியி லில்லை.
காரணம் காரியம் என்னும் வடசொல்லிணை யொத்ததே கருவி கருமம்
என்னும் தென்சொல் லிணையும்.
"மூன்றா
குவதே
ஒடுவெனப்
பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே" |
(தொல்.
557)
|
|
|
"கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையும்
உடைத்தே கண்என் வேற்றுமை" |
(தொல்.
568)
|
இங்ஙனம்
கருவி கருமம் என்னும் இரு சொல்லும், தொன்று
தொட்டுத் தமிழில் வழங்கி வருவதுடன், இலக்கணக்
குறியீட் டுறுப்புகளாகவும் அமைகின்றன. இவ் விரண்டும் கரு என்னும்
ஒரே முதனிலையினின்று பிறந்தவை. ஆதலால், கருவி என்னும்
சொற்போன்றே கருமம் என்னும் சொல்லும் தென்சொல்லாதல் தெளிவு.
கரு
என்னும் முதனிலை இன்று வழக்கற்றது. கருத்தல் செய்தல்.
கருங்களமரும் வெண்களமரும் போலப் பல்வகைப்பட்ட கரியரும்
பல்வகைப்பட்ட பொன்னருமென, இருவேறு நிற
|