பக்கம் எண் :

110வடமொழி வரலாறு

     இந்திய ஆரியமொழிகளில், நேர்வினாச் சொற்கட்கு வகரத்தின்
திரிபான ககர வடியும், உறவியல் வினாச்சொற்கட்கு எகரத்தின் திரிபான
யகர வடியும், ஆளப்பெறுகின்றன. யகரம் ஜகரமாகவும் திரியும்.

நேர்வினா உறவியல்வினா
     
மராத்தி கோட்டெ(ங்) திக்டை
     
இந்தி கஹான் யஹான்-ஜஹான்
     
வடமொழி குத்ர யத்ர

சில தமிழ் வினாச்சொற்கள் வடிவிலேனும் பொருளிலேனும் வடமொழியிற்
சற்றே வேறுபட்டுள்ளன

தமிழ் வடமொழி
     
எ-டு: எதோள் = எங்கு யத்ர = எங்கு (வடிவு)
     
  எதா-எங்கே யதா = என்று (பொருள்)

 

12. இடைச்சொற்கள்

     (1) ஒலிக்குறிப்புகள்

        எ-டு: தும், துப் (துந்துபி)

     (2) விளியொலிகள்

        எ.டு: ஊ, ஏ, ஓ-ஹூ, ஹே, ஹோ

     (3) உணர்ச்சிக் குறிப்பொலிகள்

        எ-டு: வியப்பு-ஆ-ஹா, ஓ. ஹாஹா

             மகிழ்ச்சி-ஹோ

             இரக்கம்-ஆ, ஓ

             நோவு-ஆ, ஈ, ஆ-ஹா, (உம்-) ஹும்

             நினைவு-ஏ,ஓ

             கழிவு வருத்தம்-ஆ

             இகழ்ச்சி = ஏ, (உம்-)ஹு ம்

             உடன்பாடு-(உம்-)ஹு ம்

13. பல்வகைச் சொற்பெருக்கம்

     ஆரியர் தென்னாட்டிற்கு வந்ததிலிருந்து மறைமலையடிகள் காலம்
வரை, தமிழ் வளர்ச்சி யடையவில்லை. ஏற்கெனவே அமைந் திருந்த பல
சொற்களும் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.
வடமொழியோ தமிழை இன்றியமையாத