பக்கம் எண் :

114வடமொழி வரலாறு

     தெ. ஒக்க = ஒரு. ஒகட்டி = ஒன்று.

     ஒக்க-(எக்க)-ஏக (வ.). ஒ. நோ: சொருகு-செருகு. வடமொழியில்
எகரமின்மையால் எக்க-ஏக என்றாயிற்று.

     கால்டுவெலாரும் இங்ஙனங் கருதுவதைக் காண்க.

     தமிழ் முதல் எண்ணுப் பெயரின் மறுவடிவான ஒன் (ஒன்னு, ஒன்று,
ஒண்ணு) என்பது மேலையாரியத்தில் வழங்குவதையும் நோக்குக.

     com.-Teut. one, OE. an, Du. c„n, G. ein, Gk. oinos,
oine, L. unus.

த்வி (d)

    இது துமி என்னுஞ் சொல்லினின்று திரிந்ததா யிருக்கலாம்.
துமித்தல் = வெட்டுதல், இரண்டாகப் பகுத்தல். ஒரு வெட்டில்
ஆகக்கூடிய துண்டுகள் இரண்டே. "வெட்டு ஒன்று, துண்டு இரண்டு."
என்னும் சொலவடையை நோக்குக.

     துமி-துவி-த்வி. ஒ. நோ: குமி-குவி.

     இரண்டு என்னும் தமிழ் எண்ணுப் பெயரின் வேர்ப் பொருளும்
இதுவேயா யிருத்தல் காண்க.

     ஈர்தல் = அறுத்தல், பிளத்தல். ஈர்-இர்-இரது-இரடு-இரண்டு.

த்ரி

     நார்க்கயிறும் நூற்கயிறும் திரிப்பதற்குப் பொதுவாகச் சேர்ப்பது
முப்புரியே. திரிக்கும் புரித்தொகைபற்றித் திரி என்னும் மூன்றாம் எண்ணுப்
பெயர் தோன்றியிருக்கலாம். திரி-த்ரி.

சதுர் (c)

      இது முன்னரே விளக்கப்பெற்றது.

      சட்டம்-சடம்-சடல்-சதர் - சதிர். சதுர்=நாற்கோணம், நாற்புறம், நான்கு.

      சடல்-சடலம்-சதரம் - சதிரம். சதுரம் = நாற்கோணம், நாற்புறம், நான்கு.

பஞ்ச்சன்

     ஐந்து-அஞ்சு-பஞ்சு-பஞ்ச்சு-பஞ்ச்சன்.

     ஒ. நோ: அஞ்சவன்-பஞ்சவன் (பாண்டியன்).

     அப்பளம்-அப்படம்-பப்படம் (ம.).

     அப்பன்-அப்பா-பப்பா (E.f.F.f.L.)