மேலையர்
வடமொழி வேர்ச்சொற் றிரட்டுகளின் குறை பாட்டை
ஒருவாறுணர்ந்தவராயினும், தமிழைச் செவ்வையாய்க் கல்லாமையால்
அவற்றைத் திருத்தியமைக்கும் ஆற்றலற்றவராயுள் ளனர்.
வடமொழி
வேர்ச்சொல் திரட்டின் குறைபாடுகள்
|
(1) சொன்னிலை
சொன்மூலம்
வேர் (Root), அடி (Stem), முதனிலை (Theme)
என மூவகைப்படும். வேரும் முதல்வேர், வழிவேர், சார்புவேர் என
முத் திறப்படும். முதல் வேருக்கு மூலம் முளையாகும். முளைக்கு மூலம்
வித்தே. அடி என்பது கவையுங் கொம்புங் கிளையும் போத்துங்
குச்சுமாகப் பிரியும். இவையெல்லாம் தமிழ் போன்ற இயன்மொழியிலேயே
தெளிவாய்க் காணப்பெறும்.
வடவர்
திரிபுற்ற முதனிலைகளையும் சொற்களையுமே வேர்ச்
சொல்லாகக் கொண்டுள்ளனர்.
எ-டு:
|
சுள்-சுஷ்,
பகு-பஜ் (bh)- முதனிலை.
பெருகு-ப்ருஹ்(b)-வழி
முதனிலை
செவியுறு-ச்ரு-மரூஉ
முதனிலை.
சுண்ணம்-சூர்ண்
(c), வட்டு-வட்-சொன்னிலை. |
(2) பல்வடிவச்
சொற்கள்
எ-டு
: |
அக்
= வளைந்து செல், அக்(g) = வளைந்து செல்.
அண் = உயிர் (மூச்சுவிடு), அந் = உயிர் (மூச்சுவிடு). |
(3) மூலச்சொல்லும்
திரிசொல்லும்
எ-டு
: |
அத்
(d) =உண், அச் ()
= உண்.
அஸ் = இரு, ஆஸ் = உட்கார். |
(4) இனக்கருத்துச்
சொற்கள்
எ-டு
: |
உச்(c)
= தொகு, உஞ்ச்(ch) = அரித்துத் தொகு. |
(5) பல்லசைச்
சொற்கள்
எ-டு
: |
ஒலண்ட்
= வெளியெறி, கண்டூய் = தேய். |
(6) பல்மெய்ச்
சொற்கள்
எ-டு
: |
ஸாந்த்வ்
= அமைதிப்படுத்து, ஸ்த்ருஷ் = செல். |
(7) பிற்கால வெழுத்துச்
சொற்கள்
எ-டு:
|
காங்க்ஷ்=ஆசைப்படு,
ஸ்த்ம்ப் (bh) = அசையாமல் நிறுத்து. |
|