1.
கரு-கருள். கருளுதல் = கருத்தல், கருள்-க்ருஷ்-கிருஷ்ண.
2.
கள்-கண்-கண்ணன் = கரியன். கண்ணன்-க்ருஷ்ண.
ஒ.நோ:
உள் = உண்-உண்ணம்-உஷ்ண.
'ரு'
இடைச்செருகல். ஒ. நோ: கத்(தி)-க்ருத்.
(15)
தமிழ்மூலம் மறைக்கப்பட்டுள்ளமை
வடசொற்களுள்
குறைந்த பக்கம் ஐந்தி லிருபகுதி தமிழாயினும்,
அவற்றுள் ஒன்றுகூடத் தமிழென்று காட்டப்பெறாமையும், முழுப்
பூசணிக்காயைச் சோற்றில் முழுக்குவதுபோல் தமிழ் என்னும்
பெயரே த்ரவிட என்னும் வடசொல்லின் திரிபென்று கூறுவதும்,
எத்துணை நெஞ்சழுத்தமான இரண்டகச் செயல்.
நூற்றுக்கணக்கான
வடசொற்கட்கு மூலம் அல்லது முதனிலை
தமிழிலிருக்கவும், அவற்றைக் குறியாது வடசொல்லின் பெயர்
வடிவினின்றே வினைச்சொல்லைச் செயற்கையாகத் திரித்திருக்கின்றனர்.
சமற்கிருதம் உலக வழக்கிலில்லாத இலக்கிய நடைமொழி யாதலின்
(Literary dialect), அதிற் பெயரடி வினைகளை விருப்பம்போல் மிக
எளிதாகத் திரித்துக்கொள்ளலாம். 'தாதுபாட' என்னும் வடமொழி
வேர்ச்சொற் றிரட்டின் ஆசிரியர், தந்துபுனைந் துரைத்தல் என்னும்
உத்தியை இவ்வகையில் தாராளமாகக் கையாண்டுள்ளனர்.
எ-டு
:
பிண்டம்
என்னும் பெயர் பிடி என்னும் தமிழ் வினையின் முன்னை
வடிவான பிண்டி என்பதினின்று திரிந்திருக்கவும், தாது பாடம் அதற்குப்
பிண்ட் என்றொரு செயற்கை மூலவினையைப் படைத்து, கட்டியாக
அல்லது உருண்டையாகத் திரள், ஒன்று சேர்,பொருந்து, கூடு என்று
பொருளுரைத்துள்ளது. இது பெயரடி வினை என்பதை "prob. Nom.fr.
next" என்று மா.வி.அ. குறித்திருத்தல் காண்க. "Nom.=Nominal verb.
|