பக்கம் எண் :

இலக்கணவதிகாரம்121

2     

இலக்கண வதிகாரம்

 

வியாகரணம் என்னும் சொல் விளக்கம்

     இலக்கணம், இலக்கியம் என்னும் இரு சொற்களும்
தென்சொற்களாதலால், தொன்றுதொட்டு நூலும் வனப்பும் என
இருபாற்பட்ட தமிழ்ச் செய்யுட் டொகுதிகட்கே முறையே பெயராகி
வழங்கி வந்திருக்கின்றன. இவற்றிற்கு நேர் வடசொற்கள் வியாகரணம்
(வ்யாகரண), சாகித்தியம் (ஸாஹித்ய) எனபனவாகும்.

     வ்யாகரண என்னும் சமற்கிருதச்சொல் வி+ஆ+க்ரு என்னும்
முக்கூற்றுக் கூட்டுச் சொல்.

     'வி8' என்பது, வேறு அல்லது துண்டாக என்று பொருள்படும்
முன்னொட்டு; 'ஆ' என்பது சொல் வேறுபடுத்தலன்றித் தனக்கென ஒரு
பொருளில்லா இடையொட்டு. க்ரு என்பது செய் என்று பொருள்படும்
வினை முதனிலை.

     வ்யாக்ரு=துண்டு செய், வேறு பிரி, பகு, கூறுபடுத்து, விளக்கு.

     வ்யாகரண = வேறுபடுத்தம், கூறுபடுப்பு (Analysis), விளக்கம்,
     இலக்கணம் (Grammar).

     'வி8' என்னும் முன்னொட்டு த்வி(இரண்டு) என்னும்
சொல்லி னின்று திரிந்திருக்கலாமென்று மா. வி. அ. கூறும்.
இரண்டாக்குதல் என்னும் கருத்தினின்று பகுத்தற் கருத்துத் தோன்றுவது
இயல்பே. ஆயின், விள் என்னும் தென்சொல்லின் கடைக்குறையாக 'வி'
என்னும் வடமொழி முன்னொட்டைக் கொள்வதே மிகப் பொருத்தமாம்.

     ஒ. நோ: அல்-அ, குள்-கு, நல்-ந, பொள்-பொ.

     விள்ளுதல் = பிளத்தல், பிரிதல், பகுதல், வேறுபடுதல், கூறுபடுதல்.

     விள்-விறு-வீறு-வீற்று. வீற்று வீற்று = துண்டு துண்டாய்.
     வீறு-வேறு-வேற்று.