துவர்-துவரம்
= துவர்ப்பு (பிங்.).
துவர்-துவரை
= துவரம் பயறு. தெ. துவரி, க. தொவரி.
துவரை-துவரிகா
துவரை
= உருக்கிய செம்பைச் சாந்தாக வார்த்துக் கட்டிய
கோட்டை நகர்.
"செம்புபுனைந்
தியற்றிய சேணெடும் புரிசை
யுவரா வீகைத் துவரை யாண்டு" |
(புறம். 201: 19-20)
|
துவரை-த்வாரக
வடவர்
த்வார+க என்று பகுத்து, பல புறவாயில்களை யுடையது
துவளுதல் = வளைதல்.
துவை-த்வன்2
(dh)
துவைத்தல்
= ஒலித்தல்.
துளசி-துலசி
துளவு
= துளசி. "கள்ளணி பசுந்துள வினவை" (பரிபா.75:54).
துளவு-துளவம்.
"துளவமுங் கூடையும்" (திவ்.திருப்பள்ளி.10).
துளவம்-துளபம்.
"துளபத் தொண்டாய" (திவ்.திருமாலை.45).
துளவு-(துளசு)-துளசி.
துழாய்
= துளசி. "துழாஅ யலங்கற் செல்வன்" (பதிற். 31:8).
துளவு-துளவன்
= மாயோன்.
மாயோன்
தமிழக முல்லைநிலத் தெய்வம் என்றும், துளவு
அவனுக்குரிய முல்லைநிலப் பூவென்றும் அறிக.
துறட்டி-த்ரோட்டி,
த்ரோத்ர
துறடு-துறட்டி-தோட்டி,
ம. தோட்டி. க. தொறடு, தோட்டி (d).
"உரனென்னுந்
தோட்டியான் ஓரைந்துங் காப்பான்" |
(குறள்.4)
|
தூணம்-ஸ்தூண, ஸ்தூணா
(இ. வே.).
துல்-துலை
= ஒப்பு. துல்-துன். துன்னுதல் = பொருந்துதல்.
துல்-துள்-துண்-துணர்
= கொத்து. துண்-துணை = சேர்க்கை, இரண்டு, ஒப்பு.
|