பக்கம் எண் :

மொழியதிகாரம்15

     துள்-(துடு)-துடவை = தோட்டம். துடு-துடை = தொடை.

     துடு-துடர் = தொடர். துடு-தொடு-தொடை = தொடர்.

     துண்-தூண் = 1. திரண்ட கம்பம். "சிற்றில் நற்றூண் பற்றி"

     (புறம். 86). 2. தாங்கல். "துன்பந் துடைத்தூன்றுந் தூண்" (குறள். 615).

     தூண்-தூணம் = 1. பெருந்தூண்: "பசும்பொற் றூணத்து"

     (மணிமே.1: 48). 2. பற்றுக்கோடு (அக. நி.).

     தூண்-தூணி. தூணித்தல் = பருத்தல்.

     வடவர் காட்டும் ஸ்தா (நில்) என்னும் மூலத்திற்கும் அதனின்
றமைந்த ஸ்தாணு (நிற்கும் அடி) என்னும் சொற்கும், தூண்
என்பத னொடு யாதொரு தொடர்புமில்லை.

தூணம்-தூண

தூணி1-தூணீ

     துள்-(தூள்)-(தூளம்)-தூணம் = துளைக்கப்பட்ட கூடு, அம்புப் புட்டில்.

     துள்-(தூள்)-(தூளி)-தூணி = அம்புப் புட்டில்.

"பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணி"
(பதிற்.45:1)

     ஒ.நோ: தோள்-தோணி.

     வடவர் காட்டும் துல் (நிறு) என்னும் மூலமும், மா. வி. அ. கூறும்
பொறுப்பது (bearer) என்னும் பொருளும் பொருந்தா.

தூணி2 - த்ரோண (d) - இ. வே.

     மேற்கூறியதே இதற்கும். தூணி = 4 மரக்கால் கொண்ட முகத்த லளவு.

     வடவர் த்ரு4 (தரு, தாரு = மரம்) என்பதை மூலமாகக் காட்டுவர்.

தூது-தூத (dta)

     தூது = 1. தூதுமொழி.

"தூதுரைப்பான் பண்பு"
(குறள். 681)

     2. தூது சொல்வோன்.

"தக்க தறிவதாந் தூது"
(குறள். 686)

     தூது-தூதன் (ஆ. பா.), தூதி (பெ. பா.).

     தூது என்னுஞ் சொற்கு, முன்சென் றுரைப்பது என்பதே வேர்ப்
பொருளாகும்.