பக்கம் எண் :

2வடமொழி வரலாறு

தக - தஹ் (d) - இ.வே.

     தளதளத்தல் = விளங்குதல்.

     "பசுநரம்பு தளதளப்ப" (குற்றா. தல. தருமசாமி. 34).

     தள - தழ - தழல். தழலுதல் = 1. அழலுதல்.

     "தழன்றெரி குண்டம்" (திருவிளை. நாக. 6). 2. விளங்குதல்.

"தழலுந் தாமரை யானொடு"
(தேவா. 1215 : 27)

     தழ - தக. ஒ.நோ : மழ - மக. தகதகவெனச் சொலிக்கிறது என்பது
உலக வழக்கு.

     தக-தகம்=எரிவு, சூடு. தகம் - தங்கம் = விளங்கும் பொன்.

     தக-திகழ்-திங்கள் = நிலா. ஒ.நோ : தமிழர் - திகுளர் (க.).

     தக - தகு - தகை = தாகம். தகம் - தாகம் = நீர்வேட்கை.

தட்டு-தட(d.)

     தட்டுதல் = அடித்தல், புடைத்தல், தாக்குதல்.

தடம்-தட ()

     தடம் = வளைவு, வளைந்த கரை, கரைசூழ்ந்த நீர்நிலை.

"தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்."
(தொல். 804)

     தடம்-தடாகம்.தடம்-தட்டம்.

"தட்டத்து நீரிலே தாமரை"
(திருமந். 2904)

தடாகம்-தடாக ()

தண்டம்-தண்ட (இ. வே.)

     தள்-தளம் = கனம். தெ. தளமு. 2. கூட்டம்.3. படை.

     தளம்-தடம்=பெருமை, அகலம். தடம்-தட-தடா-தடவு.

     தள்-தாள் = 1. திரண்ட அடித்தண்டு.

"தாணெடுங் குவளை"
(சீவக. 2802)

     2. அடித்தண்டு போல் தாங்குங் கால்.

"எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"
(குறள். 9)

     3. மலையடி. "தாள்வரைப் புறத்து" (திருவாலவா. 44: 36)

"விரிதாள கயிலாய மலையே"
(தேவா. 11: 56)

     தள்-தண்டு = 1. திரண்ட அடி. எ-டு: கீரைத்தண்டு. வாழைத் தண்டு,
விளக்குத்தண்டு.