பக்கம் எண் :

மொழியதிகாரம்3

     2. திரண்ட ஊன்றுகோல்.

"தலைநடுங்காத் தண்டூன்றா"
(நாலடி. 14)

     3. திரண்ட உலக்கைப்படை.

"தண்டுமுதற் சக்கரமு னேந்தும்"
(திவ். பெரியதி. 3: 9: 10)

     4. திரண்ட தடிபோன்ற பொருள்.

     எ-டு: முதுகந்தண்டு, வீணைத்தண்டு.

     5.திரண்ட படை (சேனை). தண்டெடுத்தல் = படை யெடுத்தல்.

     6. கொடித்தண்டு போன்ற உறுப்பு. எ.டு: காதுத்தண்டு.

     தண்டுதல் = பொருள் திரட்டுதல்.

"தடியெடுத்தவ னெல்லாம் தண்டற்காரனா?"
(பழமொழி)

     தண்டு-தண்டம் = 1. பெருந்தடிப் படைக்கலம்.

     "தண்டமுடைத் தருமன்" (தேவா. 1055: 6).

     3. சேனை. எ - டு: தண்டநாயகன் = சேனைத்தலைவன்.

     தண்டு-தண்டி = தண்டால் தூக்கப்பெறும் பல்லக்கு.

     தண்டி-தண்டிகை.

"வால்நீண்ட கரிக்குருவி வலமிருந்து
இடஞ்சொன்றால்
கால் நடையாய்ச் சென்றவரும் கனகதண்டி
யேறுவரே."

(பழமொழி)

     தண்டு-தண்டியம் = தண்டியப் படைக்கல் அல்லது கட்டை.

     தண்டு-தண்டை = தாமரைக்கொடித்தண்டு போன்ற காலணி.

     தண்டு-தண்டி. தண்டித்தல் = பருத்தல். தண்டி-தடி. தடித்தம் = பருத்தல்.

     தடி = பருத்த கோல். தடிமன் =பருமை. தடியன்= பூசணி.

     தண்டு-தண்டி. தண்டித்தல் = தடியாலடித்தல், தண்டனை

     செய்தல்.     தண்டி-தண்டம் = தண்டனம், தண்டனை.

     தண்டம்-தண்டா = மூவகைத் தண்டனைகளுள் ஒன்று.

     தண்டம் = 1. தண்டனை.

"தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே"
(புறம். 10: 6)

     2. வீண். எ-டு. தண்டச்சோறு.

தண்டனம் - தண்டன