தபு-தப் (dabh)
- இ. வே.
தபுதல்
= கெடுதல்.
"அதங்கோட்
டாசாற் கரில்தபத் தெரிந்து" |
(தொல்.
சிறப்புப்.)
|
"காதலி
யிழந்த தபுதார நிலையும்" |
(தொல்.
1025)
|
தபுத்தல்
= கெடுத்தல்.
"உள்ள
மழிய வூக்குநர் மிடல்தபுத்து" |
(பதிற்.
13: 18)
|
வடமொழியிற்
கெடுத்தல் என்னும் பிறவினை வழக்கே யுள்ளது.
தமிழம்-த்ரமில (த்ரமிள) த்ரமிட, த்ரவிட
தமிழ்-தமிழம்
(பெ.)-தமிழ (பெ. எ.)
தயிர்-ததி (dadhi)-இ.
வே.
தை-தயிர்.
ஒ. நோ: ஐ-அயிர் (நுண்மை), மை-மயிர் (கரியது), வை-வயிர் (கூர்மை), பை-பயிர்
(பசியது).
தைத்தல்
= குத்துதல், முட்குத்துதல்.
"கானவேல்
முட்டைக்குங் காடு" (பொய்யாமொழிப்புலவர்).
பாலிற்கு
உறைமோரிடுதலை உறைகுத்துதல், பிரை குத்துதல் என்பது வழக்கு.
ததி-தக்ஷி
(இ.)
தரங்கம்-தரங்க=அலை.
துளங்குதல்
= 1. அசைதல்.
"துளங்கிமில்
நல்லேற் றினம்" |
(கலித்.
106 : 9)
|
2.
நிலைகலங்குதல்.
"கடிமரந்
துளங்கிய காவும்" |
(புறம். 23)
|
துளங்கு
- தளங்கு - தயங்கு. தயங்குதல் = அசைதல்.
"தயங்கிய
களிற்றின்மேல்"
|
(கலித்.
31: 10)
|
தளங்கு-தரங்கு
= அசைந்தியங்கும் அலை.
"தரங்காடுந்
தடநீர்" |
(தேவா.
463: 1)
|
தரங்கு-தரங்கம்
= 1. அலை.
"நீர்த்தரங்க
நெடுங்கங்கை" |
(பெரியபு.
தடுத்தாட். 165)
|
|