பக்கம் எண் :

98வடமொழி வரலாறு

  அறுபருவப் பெயர்

    வேத ஆரியரின் முன்னோர் இருந்த வடமேலை நாடுகட்கு,
இளவேனில்(Spring), கோடை (Summer), வறளை (Autumn), மாரி
(Winter) என்னும் நாற் பெரும்பொழுதே உரியன. தென்னாடு வந்து
தமிழரோடு தொடர்புகொண்ட பின்னரே, தமிழகத்திற்குரிய அறு பெரும்
பொழுதுகளையும் ஆரியர் மொழிபெயர்த்துக் கொண்டனர்.

தமிழ் வடமொழி தமிழ் வடமொழி
       
இளவேனில் வஸந்த்த கூதிர் சரத்
       
முதுவேனில் க்ரீஷ்ம (g) முன்பனி அச்சிர
       
கார் வர்ஷ பின்பனி ஹேமந்த்த

 

எழுகிழமைப் பெயர்

 

தமிழ் வடமொழி தமிழ் வடமொழி
       
ஞாயிறு ஆதித்ய அறிவன் புத (b, dh)
       
திங்கள் ஸோம வியாழன் ப்ருஹஸ்பதி
       
செவ்வாய் அங்கார, வெள்ளி சுக்ர
       
  அங்காரக காரி (சநி)

 

பன்னீரோரைப் பெயர்

தமிழ் வடமொழி இலத்தீனம்
     
மேழம் (மேடம்) மேஷ Aries
     
விடை வ்ருஷப Taurus
     
இரட்டை(ஆடவை) மிதுன Gemini
     

ஆளி (மடங்கல்)
ஸிம்ஹ Leo
     
கன்னி கன்ய Virgo
     
துலை துல Libra
     
நளி வ்ருச்சிக Scorpio
     
சிலை தநு (dh) Sagittarius
     
சுறவம் மகர Capricorn
     
கும்பம் கும்ப (bh) Acquarius
     
மீனம் மீன Pisces

     இன்று தமிழ்நாட்டில் வழங்கும் கணிய (ஜோதிட) நூல், குமரி
நாட்டிலேயே தமிழரால் முற்றும் அறியப்பட்டுவிட்டது. அதை வழிவழி
கையாண்டுவந்த வள்ளுவரைத் தீண்டத்தகாதவரென்று தாழ்த்தி, ஆரியர்
பெரும்பாலும் தமக்கே அந் நூலாட்சியை உரிமை யாக்கிக்கொண்டனர்.