பக்கம் எண் :

`வா' என்னும் வினைச்சொல் வரலாறு115

தமிழ்கன்னடம்தமிழ்கன்னடம்
வல்லாளன்பல்லாளவரகுபரகு
வலைபலெவறிதுபறிது
வாவல்பாவல்வறுகுபறுகு (g)
     இங்ஙனமே சில ஏனைத் திரவிட மொழிகளிலும்.
     2. தெலுங்கிற் சில சொற்களின் முதலீரெழுத்துகள் முன்பின்னாக முறை மாறிவிடுகின்றன. அன்று முதலெழுத்தாகிய உயிர்க்குறில் நீண்டுவிடுகின்றது.
எ-டு:
தமிழ்தெலுங்குதமிழ்தெலுங்கு
அறைராய்உகிர்கோரு (g)
இலதுலேதுஉள்லோ
உரல்ரோலுஎழுலேய்
     வரை (எழுது) என்னுஞ்சொல் இம் முறையில் வராயு என்று திரிந்தபின், ராயு என்று முதன்மெய் கெட்டும் வழங்குகின்றது. இவ்வகையினதே வர்-வ்ரா-ரா (வா) என்னுந் திரிபும்.
     3. துடவ மொழியில் பல சொற்களின் ஆகார முதல் ஓகார முதலாகத் திரிந்துள்ளது.
தமிழ்துடவம்தமிழ்துடவம்
ஆடுஓட்நாய்நோய்
ஆறுஓற்நாவுநோவ்
காகோவ்நான்குநோங்க்
காண்கோண்பாசிபோதி
காய்கோய்பாம்புபோப்
கால்கோல்மார் (மார்பு)மோர்
தாய்தோய்மான்மோவ்
தான்தோன்வாய்போய்
வாழ்போத்க்
     ஆ-ஓ திரிபும், வ-ப திரிபும் சேர்ந்து வாய்-போய் என்று திரிந்தது போன்றதே, வா-போ திரிபும்.
     குமரிநிலத் தமிழே திரவிட மொழிகட்கெல்லாந் தாயாதலின், இக்காலத் தமிழிலும் ஒருசில சொற்கள் திரிந்திருப்பினும், அவற்றின் திருந்திய வடிவத்தையும் ஆணிவேரையும் அறிந்துகொள்ள, போதிய சான்று அத் தமிழிலேயே உள்ளதென்று அறிதல் வேண்டும்.
 
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே".
(தொல். பெய.1)