பக்கம் எண் :

100குடியாட்சி

மொழித்தரவு முறை (ballot), ஆண்டுக்கு ஒரு அரசியல் மன்றங்கூடுதல், சரிசம விழுக்காடுடை தேர்தல் தொகுதிகள், தேர்தலில் செல்வநிலைத் தகுதி அகற்றப்படல், உறுப்பினர்க்கு ஊதியம்தரல் ஆகியவை. இக்கட்சியினரின் கட்டுப்பாடற்ற வெறித்த போக்கு ஃபிரஞ்சுப் புரட்சியைப் போன்றே மக்களுக்கு வெருட்சி தந்து முழு வெற்றியடையாமல் போயிற்று. ஆயினும் படிப்படியாக வளர்ச்சி ஏற்படுவதற்கு அது துணை செய்தது. அயர்லாந்துக் குடியாட்சியியக்கத்தையும் இது வலுப்படுத்திற்று.

   விக்டோரியா அரசியினுடைய ஆட்சியின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் தலைசிறந்த முதன் மந்திரிகளும் நாட்டுத் தலைவர்களும் ஆன பிட், பாமர்ஸ்டன், டிஸ்ரெய்லி ஆகியவர்கள் மாறிமாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினர். காலப்போக்கின் சுழலிற்பட்டு அவர்கள் அடிக்கடித் தங்கள் கொள்கையை வற்புறத்தியும் குறைத்தும் கூட்டியும் திருத்தியும் வந்தனராதலால் பழைய கட்சிப் பாகுபாடுகள் பலவகையில் மாற்றம் பெற்றன. நாட்டில் இடைத்தர வகுப்பார் செல்வத்திலும் செல்வாக்கிலும் பழைய பெருநிலக் கிழவரினும் மெம்பட்டவராய் அரசியலில் வலிமை யுடைவராயினர். முன் அவர்கள் சார்பில் நின்று உழைத்தவர்கள் லிபரல் கட்சியினரேயாயினும், இப்போது லிபரல் கட்சியினருக்குப் போட்டியாக நின்று அடிக்கடிக் கன்ஸர்வேட்டிங் கட்சியினரும் அவர்களை ஆதரிக்க முன்வந்தனர். லிபரல் மந்திரிகள் செய்யமுடியாத சீர்திருத்தங்களைச் செய்யவும் அவர்கள் அரைகுறையாக விட்டவற்றை நிறைவுபடுத்தவும் கன்சர்வேட்டிவ் கட்சியார் முன்வரலாயினர். இத்தகைய போட்டிகளால்