பக்கம் எண் :

குடியாட்சி99

ஸ்காட்லந்துக்கும் அயர்லாந்துக்கும் தனித்தனி நிறை வேற்றப்பட்டன. இங்ஙனம் ஒரே அரசில் இணைந்துவிட்ட மூன்று நாடுகளும் ஒருநிலையடைந்தன.

   1832-ம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டத்தை அடுத்து 1838-ல் நகர்த்தொகுதிகளின் தேர்தல் உரிமையில் இன்னொரு மாற்றம் செய்யப்பட்டது. இதுவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்த பழய நகர்அவை இன்றைய நிலையில் நகர மக்களுக்குப் பொறுப்புடையதாகத் திருத்தி அமைக்கப்பட்டது. 1839-ல் பிரிட்டனில் மட்டு மன்றி பிரிட்டிஷ்பேரரசு முழுமையிலும் அடிமைவாணிகம் ஒழிக்கப்பட்டது. அவ்வாணிபத்தினால் பெரும்பயனடைந்து அதன் ஒழிப்பால் பேரிழப்பு அடைந்த வணிகர்களுக்கு அரசாங்கம் 2 கோடி பொன்வரை இழப்பீடாகத் தந்தது.

   ஃபிரஞ்சுப் புரட்சி யியக்கத்தின் புத்தெழுச்சி ஒன்று 1830-ல் ஃபிரான்சு நாட்டிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, முதலியவற்றிலும் எழுந்தது. அதன் பயனாகக் கொடுங்கோலரசரோடு பேரரசர்க்கும் பெருங்குடியாட்சித் தொடர்புடைய சிற்றரசுகளுக்கும் எதிர்ப்பு ஏற்பட்டன. பெல்ஜிய நாடு ஹாலந்தினிடமிருந்து விடுதலை பெற்றுத் தனியாட்சி நிறுவிற்று. இங்கிலாந்தில் இவற்றின் எதிரொலியாக 1840-ல் முனைப்பான குடியாட்சியியக்க மொன்று தோன்றிற்று. இவ்வியக்கத்தார்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு பத்திர உருவில் வகுத்துக்கிளர்ச்சி செய்ததனால் பத்திரக்காரர் (Chartist) என்றழைக்கப்பட்டனர். அப்பத்திரம் முனைப்பான கோரிக்கைகளை வற்புறுத்தின. அவை ஆண்டுநிறைவு பெற்றவர் அனைவர்க்கும் மொழி உரிமை, மறைவுடைய