| வர் ஆகியார் கைக்குட்பட்டிருந்த போலித்தொகுதிகளில் இப்போது வளர்ச்சியுற்று முன்னிலைக்கு வந்துவிட்ட வாணிகக்குழுவினராகிய புதிய இடைத்தர வகுப்பினருக்கும் மொழி உரிமை கிடைத்தது. சீர்திருத்தச் சட்டத்தினால் இவ்வகுப்பினரிடையே முன்னிலும் 1,00,000 பேர்வரை நகர்த்தொகுதிகளில் மொழி உரிமை பெற்றனர். ஆனால் பொது மக்கள் ஆட்சியுரிமை இவற்றினால் வந்து விட்டதென்று கூறிவிடல் முடியாது. அதற்கான போராட்டம் இச் சீர்திருத்தச் சட்டத்துடன் தொடங்கிற்று என்று கூறலாம். சீர்திருத்தச் சட்டத்தின் பயன்களுள் தேர்தல் முறையை விடச் சிறந்தது சட்ட அமைப்பில் ஏற்பட்ட மாறுதலேயாகும். இதுவரை சட்டங்கள் என்று அரசியல் மன்றத்தில் நிறைவேறியவை யெல்லாம் ஆங்காங்கு அவ்வவ்விடத்துக்கு வேண்டிய சில நடைமுறைகளுக்கான அரசியல் மன்ற இணக்கமேயாகும். அவ்வந் நடைமுறைகள் முடிவுற்றபின் சட்டம் பயனற்றவையாய்விடும். ஆட்சி முறையில் நிலையான ஒழுங்குகளை வகுத்து அதற்கான நிலையங்கள் அமைக்கும் புதுவகைச் சட்டங்கள் 1832-ம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டத்தின் பின்னாலேயே ஏற்பட்டன. வறுமை ஒழிப்புச் சட்டம், நகரசபைச் சட்டம் ஆகியவை இத்திறத்தவை. ஆட்சி முறையில் அக்கரைகொண்டு அதனால் நன்மைக்கும் தீமைக்கும் ஆளான நகரத்தொகுதிகளின் இடைத்தர வகுப்பினரே இத்தகைய சட்டங்கள் நிறுவுவதற்குப் பெரிதும் காரணராயிருந்தனர் என்று கூறலாம். இங்கிலாந்தில் சீர்திருத்தச் சட்டம் ஏற்பட்ட அதே ஆண்டுக்குள்ளாகவே அஃதே போன்ற சட்டங்கள் |