பக்கம் எண் :

குடியாட்சி97

பங்கீடு செய்யப்பட்டன. மாஞ்செஸ்டர், பர்மிங்ஹாம், ஷெஃப்ஃபீல்டு, லீ்ட்ஸ் ஆகிய பல நகரங்கள் இவ்வகை தேர்தலில் இடம்பெற்றன. 10 பொன்னளவு பதிவுரிமை உடையவர்களும், 10 பொன் நீண்ட தவணை ஈட்டுக்காரர்களும், 50 பொன் குறுகிய தவணை ஈட்டுக்காரர்களும், 50 பொன் மதிப்புடைய இட ஆட்சி யுடையவர்களை மாவட்டங்களில் மொழித்தகுிதி பெற்றனர். நரங்களிலும் மொழித்தகுதி ஒரே நிலைப்படுத்தப் பெற்றது. முன்னெல்லாம் தேர்தல் தகுதியுடையவர் யார்; தகுதியற்றவர் யார் என்பதை மாவட்டப்பணியாளரும் சட்ட அறிஞருமே வகுத்துரைத்தனர். இப்போது தகுதியுடையவர் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட பின்புதான் அவர்கள் மொழி தர இணக்கம் பெற்றனர்.

   இச் சீர்திருத்தச் சட்டம் முன் இருந்த குழப்ப நிலைமையை நெடுந்தொலை திருத்திற்று. செல்வர் குழுவின் தடங்கலற்ற ஆட்சி குறைவு பெற்றது. ஆனால் முற்போக்காளர் அவாக்களை அது முற்றிலும் நிறைவேற்றவில்லை. ஒழுங்கு முறையின்றிக் குவிந்து கிடந்த தேர்தல் தொகுதிகள் புதிய நிலைக்குத் தக்கபடி சற்று ஒழுங்கு முறைக்குக் கொண்டுவரப்பட்டனவே தவிர ஒரே நிலையில் தொகுதிகள் அமைவுபெறவில்லை. மக்கள்தொகை விழுக்காட்டின்படி தொகுதிகள் அமையவுமில்லை. அது போலச் சில புதிய தேர்தல் தகுதிகள் ஏற்பட்டனவே யன்றிப் பழைய தகுதி முறை அகற்றப்படவில்லை. முன்பு மாவட்டங்களில் மொழி பெற்றவர்கள் பெருநிலக்கிழவர் மட்டுமே. இப்போது அத்தொகுதி சற்றுவிரிவுற்று வேளாண்மக்களில் முதன்மை யுடையவரில் சிலரையும் உட்படுத்திக கொண்டது. நகரங்களில் பெருநிலக்கிழவர், செல்