| நிற்கவில்லை. தேர்தல் பெயரளவில் குடி மக்கள் தேர்வாகத் தோற்றிற்றேயன்றி அது உண்மையில் ஒரு சில செல்வர்கைப்பட்ட ஆட்சியுரிமையே என்பதைப் பொதுமக்கள் நன்கு உணரலாயினர். ரூஸோ, வால்த்தேர் ஆகியவர்களை ஒப்ப இங்கிலாந்திலும் பெந்தம் என்பவர் உரிமைபெற்ற வகுப்பார் ஆட்சியை ஆணித்தரமாகக் கண்டித்திருந்தார். புரட்சி அமளி அடங்கியபின் ஜேம்ஸ் மில், பிரான்ஸிஸ் பினேஸ் போன்ற அறிஞர்கள் பெந்தமைப் பின்பற்றிக், குடிமக்கள் உரிமை எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்கிப் பழய குளறுபடிகளை மிகவும் கண்டித்தனர். நாட்டு வாழ்வின் உயிர்நிலை நாடியென்ற நிலைக்கு வளர்ச்சியடைந்துவிட்ட வாணிபக்கைத்தொழில் வகுப்பினரும் தம் உரிமையைப் பெற முன்வந்து கிளர்ச்சி செய்தனர். இவற்றின் பயனாகவே 1832-ல் அரசியல் சீர்திருத்தச் சட்டம் ஏற்பட்டது. இது தேர்தல் முறையின் அடிப்படையை மாற்றிற்று; தேர்தல் தொகுதிகளை மீட்டும் சீர்திருத்தி அமைத்துத் தேர்தல் தொகுதியையும் இன்னும் நன்றாக வரையறுத்தது. மேலும் மொழியாளர் பதிவேடு ஒன்று அமைக்கப்பட்டது. 2000 மக்களுக்குக் குறைவாக உள்ள தொகுதிகள் அறவே ஒழிக்கப்பட்டு 2000-த்துக்கும் 4000-த்துக்கும் இடைப்பட்ட மக்களுடைய தொகுதிகள் ஓர் உறுப்பினர் தொகுதிகளாகக் குறைக்கப்பட்டன. இவ்வகையாகப் பழய சீர்கேடடைந்த நகரத் தொகுதிகள் 56 முற்றிலும் தலைமுழுக்காட்டப்பட்டன 31 தொகுகளில் உறுப்பினருள் ஒவ்வொருவர் குறைக்கப்பட்டனர். இக்குறைபாட்டின் மூலம் எஞ்சிய இடங்கள் மாவட்டங்களுக்கும் புதிய பல நகரங்களுக்குமாகப் |