பக்கம் எண் :

குடியாட்சி95

பகுதியிலும் வடநாட்டுப் பகுதிகளிலும் பெருநகரங்கள் ஏற்பட்டன. ஆனால் அவற்றுக்குத் தேர்வுரிமை இல்லாமலேயிருந்தது. போக, அரசர்கள் தம் விருப்பத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது பலவகைப்போலிக் தேர்வுத் தொகுதிகளை ஏற்படுத்தினர். இவையும் பெரும்பாலும் கார்ன்வால் போன்ற தென்மேற்குப் பகுதியிலேயே அமைந்தன. எட்டாம்ஹென்ரியின் காலத்தில் இங்ஙனம் 38 புதிய தொகுதிகளும் எலிஜபெத் அரசி காலத்தில் 62 புதிய தொகுதகிளும் ஏற்பட்டன. இவற்றின் பயனாய் 1832-ல் ஒரு புறம் மக்கள் நெருக்கமிக்க பல நகரங்களில் தேர்தல் தொகுதியில்லாமலிருந்தன. இன்னொரு புறம் ஒரு சில வீடுகளிருந்த இடத்திற்கு இரண்டு, மூன்று, நான்கு உறுப்பினர்தொகுதிகள்வரை தரப்பட்டிருந்தன. முன் ஊரிருந்து வெறும் மலையாகவோ வயலாகவோ போய்விட்ட இடங்களில் கூடப் போலித் தொகுதிகள் இருந்தன. அவ்விடத்திற்கு உரிய பெருநிலக்கிழவர் அவ்விடத்தில் தமக்கு வேண்டிய ஆட்களை மொழியாளராகத் தருவித்துத் தமக்கு வேண்டிய ஆட்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பல தொகுதிகள் செல்வர்கள் சட்டைப்பையிலிருந்து பணம் பெற்ற கையாட்களைத் தேர்தெடுக்கும் தொகுதிகளாகவேயிருந்தமையால் அவைகள் ‘சட்டைப்பைத் தொகுதிகள்’ என்று ஏளனமாக அழைக்கப்பட்டன.

   ஃபிரெஞ்சுப் புரட்சியின் பேரொளி விளக்கம் இத் தேர்தல் ஊழல்களை மக்கள் எல்லாரும் கவனிக்கும்படி செய்தது. மேல் பிரிவில் குறிப்பிட்டபடி 19-ம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் புரட்சியின் பயனாக ஏற்பட்ட வெருட்சியினால் பிற்போக்காளர் கை சிறிது வலுவடைந்ததுபோலத் தோற்றினாலும் இவ்வெருட