பக்கம் எண் :

94குடியாட்சி

3. வளர்ச்சிக் காலம்

   பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை பிரிட்டனின் அரசியல் மன்றத்தின் உரிமைகள் படிப்படியாக வளர்ந்து உரம்பெற்றனவாயினும் அம்மன்ற அமைப்பின் அடிப்படையான தேர்தல் முறைகள் மிகவும் சீர் கெட்டுக் குழப்ப நிலையிலேயே இருந்தன. மாவட்டத் தேர்தலில் வாக்காளர் தகுதி 1430 வரை வரையறுக்கப் படாமலேயிருந்தது. 1430ல் வாக்காளர், 40 பொன் வருவாய் மதிப்புடையதாகத் தம் உரிமையில், அல்லது தம் கைவசமாக நிலம் உடையவராயிருக்க வேண்டுமென்று வரையறை ஏற்பட்டது. ஆயினும் இவ்வரையறை தெளிவானதாயில்லை. மாவட்ட அரசியல் முதல்வரும் சட்ட அறிஞரும் விரும்பியவாறெல்லாம் அதைப் பயன்படுத்த இடமிருந்தது. இத்தகைய மாவட்டங்கள் முதலில் 37 இருந்தன. நேரடியாக மன்னருரிமை உடையவையாயிருந்த செஸ்டர், டர்ஹம் ஆகியவை நெடுநாளைக்குப் பின்தான் மன்றத்தின் தேர்வில் கலந்தன. எட்டாம் ஹென்ரியின் காலத்தில் வேல்ஸ்நாடும் முதல் ஜேம்ஸ் காலத்தில் ஸ்காட்லந்தும் மூன்றாம் ஜார்ஜ் காலத்தில் அயர்லாந்தும் அரசியல் மன்றில் இடம் பெற்றன. அவற்றின் சார்பாக ஸ்காட்லந்துக்கு 48 பேரும் அயர்லாந்துக்கு 100 பேரும் மன்ற உறுப்பினராயினர்.

   நகரத் தொகுதித் தேர்தலில் 1832 வரை நிலைமை இன்னும் பன்மடங்கு குழப்பமாயிருந்தது. தேர்தலுரிமை பெற்ற நகரங்கள் தொடக்க காலங்களில் தென்கிழக்கிலும் தென்மேற்கிலுமே மிகவும் குவிந்து கிடந்தன. வாணிகமும் கைத்தொழிலும் வளர்ச்சியடைந்து பெருகியதன் பயனாக 18-ம் நூற்றாண்டு்க்குள் இடை நாட்டு