| கட்சியினர் உருதுவினும் இந்து மக்களிடையே பரந்த விரிவுற்ற இந்த மொழியைப் பொதுமொழி யாக்க முன் வந்தனர். இதனால் வடவரிடையே இந்து முஸ்லிம் வேற்றுமை பிறந்தது. இந்தியாவுக்குப் பொதுமொழி வகுக்கும் முயற்சியால் மொழியினும் இனம் வலிது என்ற உண்மை வெளிப்பட்டுப் பலமொழி பேசும் வடநாட்டு முஸ்லிம்கள் உருதுவையும் (உருது உட்படப்) பல மொழி பேசும் வடநாட்டு இந்துக்கள் இந்தியையும் நாட்டு பொது மொழியாகக் கொண்டனர். முஸ்லீம் இந்தியா (பாகிஸ்தான்) இந்து இந்தியா (இந்துஸ்தான்) என்ற பாகுபாடு இதனின்றும் கிளைத்தது. முஸ்லிம் இந்தியா, இந்து இந்தியா என்ற இந்நாட்டுப் பிரிவினை, முஸ்லிம் தண்ணீர், இந்து தண்ணீர் எனப் பஞ்ச பூதங்களிலொன்றாகிய தண்ணீர் பிரிக்கப்படும் அளவு வடநாட்டில் வேரூன்றி வளர்ந்து விட்டது. வடநாட்டில் இந்தியைப் புகுத்தத் தொடங்கிய ஆரிய இந்துக்கள் அவ்வேற்றுமை நிலவாத முழுத்திராவிட இந்தியாவாகிய தென்நாட்டை அம்முயற்சிக்குக் கருவியாக்க முயன்று இங்கும் இந்திப் புதுப்பயிர் விளைவிக்க முயன்றனர். வடநாட்டில் முஸ்லீம்களைத் தட்டி எழுப்பிய பெருமையுடைய இதே இந்தி தென்நாட்டில் தமிழர்களையும் அவர்களைப் பின்பற்றிப் பிற திராவிடர்களையும் தம்மொழி, தம் இனம் ஆகியவற்றை அறியத் தூண்டுதலாயமைந்தது. முன் ஆயிரவகுப்பாகப் பிரிந்து ஒரு வகுப்பின் குத்தகையாட்சியை எதிர்க்க 999 வகுப்புக்கள் சார்பில் எழுந்த நேர்மைக் கட்சியியக்கம் அவ்வொரு வகுப்பு ஒரு தனியினம், 999-வகுப்புக்களும் உண்மையில் நாட்டு மக்க |