| ளிடையே பெரும்பான்மையான மற்றோரினம் என்ற உண்மை கண்டு தன் கிளை இனத்தவரான வடநாட்டு முஸ்லீம்களைப்போலத் தனிநாடு தனியாட்சி கோரிற்று. இந்நிலையில் அமெரிக்க முன்மாதிரியும் பயனற்றுப் போயிற்று. ஐரோப்பிய அரசியலில் மலைமுகட்டில் எங்கோ பதுங்கி வாழ்ந்த ஓர் அரசியல் (சுவிட்சர்லாந்து) இப்போது முன் மாதிரி ஆகத் தொடங்கிற்று. இங்கே கூட்டுறவாட்சி ஏற்பட்டுப் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் முன்னதாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. இங்கு இன வேற்றுமை, நாட்டு வேற்றுமை ஆகியவற்றை விட மொழிவேற்றுமையே மிகுதி. ஆனால் நாடோ நம் தமிழ் நாட்டின் ஒரு வட்டத்துக்கும் போதாத சிறு துண்டு. அச்சிறு நாட்டு மக்கள் ஒரு மொழியை இன்னொரு மொழிமீது திணிக்க மனமில்லாதவராய் அங்கு நிலவும் மூன்று மொழிகளையும் பொது மொழிகளாகக் கொண்டு மொழிபெயர்ப்பால் ஆட்சி செலுத்துகின்றனர். அச்சிறு நாட்டிற்கு மூன்று பொதுமொழி யானால் இந்தியா போன்ற பெரு நாட்டுக்கு இரண்டு மொழி ஏன் கூடாது என எண்ணி இந்தியையும் உருதுவையும் பொதுமொழிகளாக்கலாம் என்று கொண்டனர் நாட்டுரிமைக் கட்சியறிஞர். ஆனால் முஸ்லிம் இனம் இது கண்டு மனமாறவில்லை. அதே வாதத்தைக் காட்டிப் பல இனத்துமக்களும் "இந்தியாவில் ஒன்றிரண்டு மொழிகள் தான் ஏன் பொதுமொழிகள் ஆகவேண்டும். சிறிய நாடாகிய சுவிட்சர்லாந்து, அங்கு பேசப்படும் மூன்று மொழிகளையும் அரசியல் மொழிகளாகக் கொள்ள முடியுமானால் இங்கும் ஏன் எல்லா மொழிகளும் அவ்வத் தனியரசின் அரசியல் மொழியாகவும், அனைத்துமே கூட் |