பக்கம் எண் :

குடியாட்சி195

டுறவாட்சியின் பொதுமொழிகள் ஆகவும் நடைபெறக்கூடாது" என்று கிளர்ச்சி செய்யலாயினர். மொழி பெயர்ப்பாட்சி சிறு நாட்டில் செல்லுமானால் பெருநாட்டுக்கு-பிற மொழிப் பயிற்சியில் உலகில் எந்நாட்டையும் வென்ற இப்பெருநாட்டிற்கு, ஏன் செல்லாது? 
  

   இவ்வகையிலும் உருசியப் பெரு நாட்டின் அரசியல் நல்ல வழிகாட்டியாகின்றது. அங்கு ஒவ்வொரு தனியரசிலும் அவ்வம் மொழியே அரசியல் மொழி. கூட்டுறவாட்சியில் எல்லா மொழியிலும் எழுத்து மூலங்கள் மொழிபெயர்க்கப்படும். அது மட்டுமன்று. உருசியர் நாட்டுப்பற்று மொழி, இனம் ஆகியவற்றைப்பற்றிப் பசப்பி ஒருமை காண முயலாது ஒற்றமை காணவே முயல்கின்றது என்று உணரலாம். பொது மக்கள் ஆட்சியில் அரசாங்கம்தான் இறங்கி வந்து பொதுமக்கள் மொழியைக் கற்றுப் பொதுமக்களிடையே தன் கருத்தைப் பரப்ப வேண்டுமே யன்றிப் பொதுமக்கள் அரசாங்கத்தின் பொதுமொழியைக் கற்கும்படி வற்புறுத்தப்படவோ தூண்டப்படவோ கூடாது. இதன்படி உருசியப் பேரரசின் நடவடிக்கைகள் யாவும் விரிவான மொழிபெயர்ப்புத் துறை ஒன்றின் மூலம் எல்லாப் பகுதிகளின் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. செர்மன் மொழி பேசும் செர்மன் குடியரசு ஒன்று யூரல் பகுதியில் தனித்து வாழ்கின்றது. இதன் மீதுகூட உருசிய மொழி சுமத்தப்படவில்லை. அதன் அரசியல் செர்மன் மொழியில் நடைபெறுவது மட்டுமன்றி, கூட்டுறவு அரசியலின் எழுத்து மூலங்களும் அச்சிறு குடியேற்றத்தாரின் நன்மைக்காக செர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அதுமட்டுமோ! உலக