பக்கம் எண் :

குடியாட்சி197

   மேலும் இன்வாரியாக நாடுகளைப் பிரிக்க உருசியா தயங்கவில்லை. எனவேதான் இனவாரிநாடுகளும் பிரிந்த பின்னும் அப் பேரரசியல் கூட்டுறவில் தம் விருப்பத்துடனேயே இணைகின்றன. இந்தியாவில் பிரிய வேண்டும் என்ற இனத்தைப் பிரிப்பதால் அன்புப் பிணைப்பு ஏற்படும் என்ற உண்மையை அன்புமுறையும் அருள்முறையும் பேசும் காந்தியடிகள் போன்ற தலைவர்கள் கூடக் கவனிக்காதது வருந்தத்தக்கது. அதுமட்டு மன்று. சரி நிலைக் கொள்கையிலும் உருசியாவிலும் மிகுந்த அக்கரை செலுத்தும் சவகர்லால்நேரு போன்ற பேரறிஞர்கள் நாட்டுரிமைக் கழகத்தின் தலைவர்களா யமைந்த போதிலும் இவ் வகையில் மக்களுக்கு வழிகாட்டாதது வியப்புக் கிடமாகும்.

   நாடுகள் இனவாரி, பண்புவாரியாகப் பிரிவதனால் பெருநாட்டின் ஒற்றுமை மிகுமேயன்றித் தளர்வுறாது என்பதை உருசியா செயல் முறையிலேயே காட்டி விட்டது. 

   எனவே தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மலையாள நாடு முதலிய நாடுகள் தனிநாடுகளாவதோ அவை ஒன்று பட்டுத் திராவிடப் பெருநாட்டின் கூட்டுறவாவதோ உண்மையில் நாளடைவில் இந்திய உலகில் சீர்கேட்டை விளைவிப்பதற்கு மாறாக, மிக ஆழ்ந்த அடிப்படையில் ஒற்றுமையை விளைவிக்கவே உதவும் என்பதைக் காணலாம். இத் திராவிடப் பெருநாட்டுக் கூட்டுறவு பாகிஸ்தான், இந்துஸ்தான், சீக்கிஸ்தான் முதலிய எத்தனை கூட்டுறவுகளுடனும் தனிநாடுகளுடனும் வேண்டும்போது நேச முறையில் ஒன்றுபட்டுப் பெருங் கூட்டுறவாகக் கூடும். வடநாட்டுத் திராவிட இனமும் தாழ்த்தப்பட்ட இனமும்