| பிரிந்தால்கூட இப் பேரிணைப்புக்கு உதவியாகுமே யன்றி வேறன்று. தொலைப்பட்ட எதிர்காலத்தில் இப்படியே இந்தியப் பெருங் கூட்டுறவும் பாரசிகம், அராபியா முதலிய முஸ்லிம் நாடுகளுடனும் பர்மா, சீனா முதலிய புத்த சமய நாடுகளுடனும் பொதுஉடைமை உருசியாவுடனும் சேர்ந்து ஆசியப் பெரும்பேருறவில் சேரவோ, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, ஆத்திரேலியக் கூட்டுறவுகள் அமைந்து அவற்றுடன் கூட ஒன்றுபடவோ செய்யலாம். ஆனால் இவையனைத்தும் தன் சார்பில் ஒவ்வொருநாடும் கூட்டுறவும் முன்பின் ஆய்ந்து செய்ய வேண்டியவை. கூட்டுறவில் சேர்வதால் தம் வளர்ச்சிக்குத் தடையோ, தம்நிலை பிறர்நிலையுடன் சரிநிகர் நிலையாயிராதென்றஐயமோ இருக்கும்வரை இத்தகைய கூட்டுறவு ஒற்றுமை ஏற்படாது. இன்னொரு வகையில் உருசியா நமக்கு அரிய படிப்பினை ஒன்று தரலாம். பிரான்சு நாடு அரசியலில் மட்டும் புரட்சி ஏற்படுத்த அமைந்தது. அதனைவிடப் பொருளியல் முறையையும் மாற்றி அமைத்த உருசிய நாடு பிரான்சிலும் பிற்பட்ட நிலையிலிருந்ததாயினும் இன்று முற்பட்டிருக்கிறது. இன்றைய இந்தியாவும் அதனினும் சிறப்பாகத் தமிழ்நாடும் அரசியலில் ஐரோப்பாவுக்கும் இன்றைய உருசியாவுக்கும் பிற்பட்டு அடிமை வாழ்வு வாழ்கிறது. பொருளியலில் தமிழ்நாடு ஐரோப்பாவிற்கும் உருசியாவிற்கும் வட நாட்டிற்கும் பிற்பட்டேயிருக்கிறது. இவை யனைத்திலும் மேலாக வாழ்வியலில் சீனா, பர்மா, மலாயா, இலங்கை முதலிய நாடுகளையும் விடத் தமிழ் நாடும் இந்தியாவும் பிற்பட்டுள்ளன. உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத பிறப்பு வேற்றுமை பிற நாட்டின் |