பக்கம் எண் :

குடியாட்சி199

பொருள் முதலாளி, அறிவு முதலாளி, சமய முதலாளி ஆகியவற்றைக் கடந்த பிறப்பு முதலாளி இனம் ஒன்று இந் நாட்டிலுள்ளது. எனவே பொருளியலில் பிற்பட்ட உருசியா அரசியல் புரட்சியுடனமையாதது போல், வாழ்வியலிலும் பிற்பட்ட நம் நாடும் இந்திய அயல் நாடுகளும் பொருளியல் புரட்சியுடன் அமைந்துவிட முடியாது. உருசியாவில் பொருளியல் புரட்சி மீதே அரசியல் புரட்சி அமைந்தது போல் இந் நாட்டின் வாழ்வியல் புரட்சி ஏற்பட்டு அதன் மீது பொருளியல் புரட்சியும், அதன் மீது அரசியல் புரட்சியும் ஏற்பட்டாலன்றி உண்மையில் புரட்சி வெற்றியடையாது. இதனை உணர்ந்துதான் போலும் சங்கரர், இராமானுசர் முதலிய சமயத் தலைவர் ஆனமட்டும் சமூகத்தைச் சீர்திருத்த முயன்று தோல்வியுற்றனர். புத்தர், மகாவீரர், அது சமய அடிப்படையுடையதெனக் கண்டு புதுச்சமயம் வகுத்தும், அச் சமயங்கள் இத் தெய்வத் திரு நாட்டில் இடம் பெறாது போயின. வள்ளுவர் எதிர்கால நிலையை நுனித்தறிந்தவர்போல் கலையளவில் இந்நெறியைப் பொறித்து வைத்தார்.

   உருசியப் புரட்சியினை எதிர்த்த மந்தமதிகள் அரசியல் புரட்சியே போதும்; பொருளாதார நிலைசரிப்பட்டுவிடும் என்று கூறியதுபோல், இன்று இந் நாட்டில் பொது உடைமை வாதம் செய்யும் சிலர் பொருளியல் புரட்சி போதும்; வாழ்வியல்நிலை சரிப்பட்டவிடும் என்கின்றனர். இது உண்மையில் ஆசிரியர் உரைகளைப் புகழ்ந்து, அவர் அடிப்படைக் கோட்பாட்டை மறுத்துவிடுவது போன்றதேயாகும். ஐரோப்பாவைவிடச் சீர்குலைந்த உருசியநாடு அதனினும் அடிப்படைச் சீர்திருத்தத்தை அவாவியது போல், உருசிய நாட்டிலும் சீர்குலைந்து பிற்பட்டு இழிநிலையி