பக்கம் எண் :

குடியாட்சி67

வாயிலாக மன்னர் தருவித்தார். இதுவரை பெருமக்களும் தலைமக்களுமே இருந்த மன்னரவை போலல்லாது வரி எழுப்பும் நோக்கத்துடன் எழுந்த இம்மன்றத்தில் முதல் தடவையாகப் பொதுமக்கள் சார்பிலும் மாவட்டத்திற்கு நால்வர் அமரலாயினர்.

   அரசியல் அறிவும் துணிவும் வாய்ந்த ஸைமன் இப்புது முறையின் பயனை நன்குணர்ந்து அதனைப் பின்னும் தொடர்ந்து வலியுறுத்தினான். மன்னர் கட்சியினரைப் போரில் 1264ல் முறியடித்தபின் அவன் கூட்டுவித்த 1265ம் ஆண்டைய அரசியல் மன்றில் மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றித் தலைமைவாய்ந்த மாநகரங்களிலிருந்தும் (Cities) சிறுநகரங்களிலிருந்தும் (boroughs) ஆட்பெயர்களை (Representatives) வரவழைத்தான். இவ்வரசியல் மன்றம் ஸைமனின் அரசியல் மன்றம் என வரலாற்றில் கூறப்படுகிறது. ஸைமனையும் வரலாற்றாசிரியர் பலர் ‘ஆங்கில அரசியல் மன்றத்தின் தந்தை’ என அழைப்பதுண்டு. ஆயினும் ஸைமனினும் மேம்பட இப்பெயர் மூன்றாம் ஹென்ரிக்குப் பின் வந்த அரசனாகிய முதல் எட்வர்டுக்கே பொருந்தும்.

   மன்னனை தலைவன் கூட்டுவித்த 1265-ம் ஆண்டைய அரசியல் மன்றை விட (மன்னரே நேரடியாகக் கூட்டிய) முதல் எட்வர்டின் 1295-ம் ஆண்டைய ‘மாதிரி அரசியல் மன்றம்’ பெரும் சிறப்புடையதாகும். இதுகாறும் குறுநில மன்னர் பேரவையாக (Feudal assembly) இருந்த மன்னரவைகளைப் போலல்லாது இதுவே முதன் முதலாக நாட்டுமக்கள் பேரால் அவர்களிடம் பொறுப்புடைய மக்களைத் திரட்டும் விருப்புடன் அரசன் கூட்டிய முதல் அரசியல் மன்றமாகும். இம்மன்