| றுக்கு மன்னன் பெருநிலக்கிழவராகிய முதற்பெருமக்களை மட்டுமன்றிச் சிறுநிலக்கிழமையுடைய மற்ற வேளாண்மக்களையும் (tenants-in-chief) முதல் தலைமக்களேயல்லாது துணைத் தலைமக்களையும் அழைத்ததுடன் ஸைமன் அரசியல் மன்றில் அழைத்தது போலவே மாவட்டங்கள், மாநகரங்கள், சிறுநகர்கள் ஆகியவற்றிலிருந்தும் இரண்டிரண்டு ஆட்பெயர்களை மொழித்தரவு மூலம் தேர்ந்தெடுத்துத் தருவித்தான். தொடக்கத்தில் அரசியல் மன்ற உறுப்பினர் மூன்று கூறுகளாகப் பிரிந்து மும்மண்டலத்தார் (Three Estates) அழைக்கப்பட்டனர். அவை தலை மக்கள் மண்டலம், பெருமக்கள் மண்டலம், பொதுமக்கள் மண்டலம் என்பவை. ஃபிரான்சு நாட்டில் 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற ஃபிரஞ்சுப் புரட்சிக்காலம்வரை ஃபிரஞ்சு அரசியல் மன்றம் (States general) இங்ஙனம் மூன்று பிரிவுகளாகவே நடைபெற்றது. மெய்ட்லன்ட் என்ற வரலாற்றறிஞர் இம்மண்டலங்களைத் தொழுவோர் மண்டலம், போர் புரிவோர் மண்டலம், உழைப்போர் மண்டலம் என அழகுபடப் புனைந்து கூறுகிறார் (Maitland; Constitutional History of England) இங்கிலாந்திலும் அரசியல் மன்றில் இம் மூன்று பிரிவுகளும் நிலைத்திருகக் கூடுமாயினும் தற்செயலான சில இயற்கைக் காரணங்களால் மூன்றும் இரண்டாய் இணைந்துவிட்டன. முதன்மையான தலைமக்களுடன் துணைத்தலைமக்களும் அழைக்கப்படினும் அவர்கள் தம் சமயத் துறையைவிட்டு அரசியலில் லீடுபட்டுத் தலைநகரில் நெடுநாள் தங்க விரும்பவில்லை, முதன்மைத் தலைமக்களோவெனில் சமயத்துறை பணிசெய்பவராக மட்டுமின்றி அதன் சார்பில் |