பக்கம் எண் :

குடியாட்சி69

பெருநிலக் கிழவராகவும் இருந்தமையால் அம்முறையில் பெருநிலக்கிழவரான பெருமக்களுடன் நாளடைவில் ஒன்றுபட்டுப் போயினர். எனவே முதல் மூன்று எட்வர்டு அரசர்களின் ஆட்சிக் காலங்களுக்குள்ளாகவே மும்மண்டலங்கள் அரசியல் மன்றின் இரண்டு அவைகளாகத் தொகுக்கப்பட்டுப் போயின.

   முதல் எட்வர்டு அரசன் வேல்ஸை வென்றடக்கினான். ஸ்காத்லந்தை வெல்லும் முயற்சியில் மாண்டான். அவன் புதல்வன் இரண்டாம் எட்வர்டு, ராபர்ட் ப்ரூஸ் என்ற ஸ்காத்லந்து வீரனால் முறியடிக்கப்பட்டு அந்நாட்டை இழந்தான். மூன்றாம் எட்வர்டு ஃபிரான்சுடன் நூற்றாண்டுப் போர் என்ற பெரும்போர் தொடங்கினான். இப்போர்களால் மன்னன் கவனம் வெளிநாடுகளில் பெரிதும் ஈடுபட்டது. பெருமக்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு புதிதாக அமையப்பெற்ற அரசியல் மன்றத்தின் மூலமாகத் தம் ஆற்றலை மீட்டும் வளர்த்துக்கொள்ளலாயினர். எனவே அரசியல் மன்றத்தின் உரிமைகள் விரைந்து வளர்ச்சியுற்றன. போர்ச் செலவுக்காகப் புது வரி எழுப்பும் இன்றியமையாமையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் மன்றம் பேருரிமைத்தாள் காலத்தில் பெற்ற உரிமையால் மன்னன் நேர்வரி (direct) சுமத்தும் உரிமையை மறுத்ததுடன் மறைமுகவரி (indirect tax) பிரிக்கும் உரிமையையும் அப் பேருரிமைத் தாளில் தரப்பட்ட உரிமையளவிற்குக் கட்டுப்படுத்திற்று. அதனோடு 1337-ல் அரசியின் துணையும் இளவரசன் துணையும் பெற்று மன்றம் மன்னனை அரசிருக்கையினின்றும் அகற்றி அவன் மகனாகிய இளவரசனை மன்னனாக்கவும் துணிந்தது. 1377-ல் மன்றம் (Good parliament) என்ற அரசியல்