| மன்று மன்னனுக்கு உதவி செய்த இளவரசன் ஜானையும் அவன் நண்பரையும் கண்டித் தொறுக்கும் ஒறுப்பு நடை முறையையும் (impeachment) கையாண்டது. 1399-ல் அது இத்தனையையும் தாண்டித் தன்னை மீறி ஆட்சி செய்ய முனைந்த இரண்டாம் ரிச்சர்டு அரசனை வீழ்த்தி அவன் உறவினனாகிய லங்காஸ்டர் கால்வழியினனான நான்காம் ஹென்ரியை அரசனாக்கிற்று. 1327 லும் அரசியல் மன்றம் ஓரரசனை வீழ்த்திய தாயினும் அஃது உண்மையில் அரசியின் துணையுடனும் இளவரசன் துணையுடனும் செய்தது. மேலும், அதன் மூலம் அரசன் ஆனவனும் ஒழுங்கும்படியே அரசனான படியால் அது உண்மையில் மக்கள் உள்ளத்தில் அத்தனை பெரும் புரட்சி மனப்பான்மையைக் குறிக்கவில்லை. ஆனால் இம்முறையோ மன்னனை எதிர்த்தவர்கள் குடிமக்களேயன்றி வேறு யாருமிலர் அவர்கள் தேர்ந்தெடுத்த அரசனான ஹென்ரியும் அரசக் குடியினனாயினும் நேரடியாக அரசுரிமைக்குத் தகுதி உடையவன் அல்லன். எனவே 1399-ம் ஆண்டின் இந்நிகழ்ச்சியைச் சில வரலாற்றாசிரியர் லங்காஸ்டிரியப் புரட்சி எனக் கூறுவதும் உண்டு. லங்காஸ்டிரிய ஆட்சித் தொடக்கத்துடன் ‘உயிர்ப்புக் காலம்’ முடிவடைகிறது. இக்காலத்தில் அரசியல் மன்றத்தின் உரிமைகள் மிக விரைவில் வளர்ச்சியடைந்து கிட்டத்தட்ட இன்றைய நிலையில் உள்ள உரிமைகளைப் பெற்றன. மன்ற அமைப்பும்-என் நடை முறைகளும் கூட-ஓரளவு இன்றைய நிலைமையை அடைந்தன. ஆயினும் பொதுமக்கள் முற்றிலும் விழிப்படைந்து தம் பொறுப்புணராமையாலும், பெருமக்கள் மன்னனை எதிர்க்கும் ஒரு செய்தி நீங்கலாக மற்றெவ்வகையிலும் ஒற்றுமையற்றவர் |