| முன் இரண்டு காலப்பகுதிகளிலும் அரசியல் உரிமையாகிய உயிர் பெற்றும், நடை முறைகளாகிய உடல் பெற்றும் அரசியல் மன்றம் பொதுமக்கள் ஆற்றலாகிய உரம்பெறாதிருந்தது. அவ்வுரத்திற்கு வழிகோலியது டியூடர் ஆட்சியாகும். இக்காலம் (1485-1615) அரசியலின் உள்முதிர்வுக் காலம் ஆகும். இக்காலத்தில் அரசாண்ட டியூடர் மன்னர் நார்மானிய அரசர்களைப் போலவே பெருமக்களை மீட்டும் எழவொட்டாமல் அடக்கிப் பொதுமக்களை ஆதரித்தனர். அவ்வாட்சியால் வாணிகமும் தொழிலும் செழித்தோங்கின. கல்வி வளர்ச்சியுற்றது. பொது மக்களிடையே பொருள் வாய்ப்பும் அறிவும் ஓய்வு நேரமும் உடைய இடைத்தர வகுப்பொன்று ஏற்பட்டது. இவ்வகுப்புனர் பெருமக்களைவிடப் பொதுநல உணர்ச்சியுடையவர். அவர்களைபோலத் தந்நல வேட்டையும் போர்க் குணமும் உடையவர்களல்லர். டியூடர் மன்னரின் வல்லாட்சி எவ்வளவு கடுமையாயிருப்பினும் பொதுமக்கள் சார்பாகவும் நாட்டு நலனுக்கு உகந்ததாகவும் இருந்ததால் இடைத்தரவகுப்பார் கைப்பட்ட அரசியல் மன்றமும் டியூடர் மன்னர் விருப்பத்திற்கேற்றபடி யெல்லாம் குழைவுற்று அவர்கள் கைக்கருவியாகவும் அவர்கள் ஆட்சிக்குப் பக்கவலுவாகவும் அமைந்தது. டியூடர் ஆட்சியின் இறுதியில் அவ்வப்போது மன்றம் அரசரது விருப்பத்திற்கு முற்றும் இணங்காது முறுகிய துண்டு. ஆயினும் டியூடர் அரசர் வன்மையுடன் நயமும் உடையவர்களாதலால் சற்றுவிட்டுக் கொடுத்துத் தம் உரிமையைப் பாதுகாத்துக்கொண்டனர். ஆற்றலும் அறிவும் வாய்ந்த அம்மன்னர் அரசியற் குழவி உரம் பெற்று வருகிற தென்பதை உணர்ந்து முரண்டிக் கொள் |