| ஆனால் பிரிட்டிஷ் மக்கள் போராட்டம் முற்றிலும் வீண்போகவில்லை என்பதை இரண்டாம் சார்ல்ஸ் ஆட்சியும் இரண்டாம் ஜேம்ஸ் ஆட்சியும் காட்டின. தம் உரிமைக்காக முடியரசர் தலையையே துணிக்கத் துணிந்து நாட்டின் மக்கள் மீட்டும் அடிமைகளாக வாழ்வது என்று எதிர்பார்க்க முடியாதன்றோ? அத்துடன் அரசுரிமைப் போர்க்காலத்தில் ஏற்பட்ட "நீண்ட அரசியல் மன்ற"த்தின் (Long Parliament) முற்பகுதியில் நிறைவேறிய நடுநிலைச் சீர்திருத்தங்கள் பல நிலையாகநின்று ஆங்கில அரசியலில் இடம் பெற்றன. இவற்றுள் மன்னன் வரி சுமத்தும் உரிமை முற்றிலும் கட்டுப்பட்டதொன்று மன்றத்தைக் கூட்டாது மூன்றாண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிவதைத் தடுப்பது, ஒழுங்கான வழக்குமன்ற ஆராய்ச்சியின்றிப் பெருமக்களை ஒறுக்க டியூடர் அரசர் அமைத்த விண்மீன் மண்டலமன்றம், உயர் ஆணைமன்றம் (Court of Star Chamber, Court of High Commission) முதலிய ஒழுங்குமன்றங்கள் அகற்றப்பட்டது ஆகியவை வேறு சில. மேலும் இரண்டாம் சார்ல்ஸ், இரண்டாம் ஜேம்ஸ் ஆகியவர் ஆட்சிகளிலேயே ஆளுரிமைச்சட்டம் முதலிய முதன்மைவாய்ந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆளுரிமைச்சட்டம் (Halus Corpus Act குற்றத்தாள் வழங்காது ஒரு வரைச் சிறைப்படுத்தும் உரிமையை கட்டுப்படுத்திற்று. சிறைப்பட்டவர் எவரும் இச்சட்டப்படி தன்னை வழக்கு மன்றத்தில் கொண்ட வந்து தன் குற்றத்தை ஆராயும்படி அரசாங்கத்தில் முறையீடுசெய்து கொள்ளலாம். இன்றளவும் தனிமனிதன் உரிமையைக் கொடுங்கோன்மையிடமிருந்து காப்பாற்ற இது ஒப்பற்ற சட்டமாயிருந்து வருகிறது. பிறநாடுகளும் |
|
|