பக்கம் எண் :

குடியாட்சி77

இவ்வரிய சட்டத்தை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசுரிமை விலக்குச்சட்டப்பகர்ப்பு (Exclesion Bill) ஒன்றும் கொண்டவரப்பட்டது. இது நிறைவேறினால் இரண்டாம் சார்ல்ஸுக்குப்பின் அவர் உடன்பிறந்தார் ஜேம்ஸ் இரண்டாம் ஜேம்ஸ்) பின்னால் அரசராயிருக்க முடியாது. எனவே உடன்பிறந்தார் உரிமையைக் காக்க மன்னர் அது நிறைவேறுமுன் அரசியல் மன்றைக் கலைத்தார். அதைக் கட்டாயம் நிறைவேற்றும்படி சிலரும், நிறைவேற்றக் கூடாதென்று சிலரும் மன்னரிடம் மனுச்செய்தனர். இவர்களே நாளடைவில் விக்குகள் (Whigs) டோரிகள் (Tories ) என்ற இருகட்சிகளாயினர். இவர்களுள் விக்குகள் ஸ்டியூவர்ட் அரசர்களை எதிர்த்த அரசியல் மன்ற முற்போக்குக் கட்சியினர். இவர்களே இறுதியில் கத்தோலிக்கரான லேம்ஸைத் துரத்தி அவர் மருகனும் புரொட்டஸ்டண்டு சமயத்தினரான மூன்றாம் வில்லியத்தை அரசனாக வரவேற்றவர்கள். டோரிகள் ஸ்டூவர்ட்களை ஆதரித்தனர். மூன்றாம் வில்லியம் வருவதை இவர்கள் விரும்பவில்லை. அரசரானபின் வேண்டாவெறுப்பாய் ஏற்றனர். பிற்காலத்தில் இவ்விரு கட்சியினருமே இம்மரபு மாறாது முறையே பொதுப்படைச் சீர்திருத்தம் கோருபவராகவும் பழைமை பேணுபவராகவும் (Liberals, Conservatives) மாறினர்.

   இரண்டாம் ஜேம்ஸ் அரசர்க்கு எதிராக விக்குகள் செய்த கிளர்ச்சி வெற்றியடைந்ததே, முதலாம் ஜேம்ஸ் முதலாக இரண்டாம் ஜேம்ஸ் ஈறாக ஸ்டியூவர்ட் அரசர்கள் கொண்ட அரசர் உரிமைகள் எல்லாம் யாதொரு சந்தேகமின்றி ஒதுங்கிப்போயின. புதிய அரசன் ஆட்சியில் வெற்றிபெற்ற அரசியல் மன்ற முற்போக்குக் கட்சியின்