| ரான விக்குகள் அம்மன்றின் நிலையை மேலும் உறுதிப்படுத்தி அரசன் வலிமையை வரையறுக்கும் சட்டங்கள் செய்தனர், பிறநாடுகளில் பெருங்கிளர்சியுடனும் குறுதி சிந்தியும் நடந்த பெருமாறுதல் இங்ஙனம் எளிதில் நிறைவேறியது கண்டு வரலாற்றறிஞர் இதனைக் குருதியிலலாப் புரட்சி என்றும் புகழ்மிகக் புரட்சியென்றும் சந்தடியற்ற புரட்சி என்றும் புகழ்வாராயினர். 2. முயற்சிக் காலம் ஆங்கில மக்கள் பல நூற்றாண்டுகளாகக் கிளர்ச்சி செய்தும் போராடியும் கிடைக்காத அல்லது கிடைத்தும் கால முதிர்ச்சின்மையாலோ அரசன் ஆற்றல் மிகுதியாலோ பயன்படுத்திக் கொள்ள முடியாத உரிமைகள் மேற் போக்காகப் பார்த்தால் அருமுயற்சி எதுவுமில்லாமலே இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் வீழ்ச்சியின் பின் புதிய அரசர் ஆட்சியில் கிடைத்தன. ஆனால் உண்மையில் அவை ஒரளவு முதல் சார்ல்ஸ் அரசன் ஆட்சியில் ஏற்பட்ட போராட்டத்தின் தொலைப்பயன்களேயாகும். கிராம் வெல் ஆட்சி மட்டற்ற முன்னேற்றத்தைக் கொண்டுவர முயன்றதனால் தோல்வியடைந்த பின், இரண்டாம் சார்ல்ஸ் அரசர் ஆட்சியுடன் பல வகையில் பழய முதல் சார்ல்ஸ் அரசர் ஆட்சி முறையே மீண்டும் நடைமுறைக்கு வந்தது போலத் தோற்றிற்று. ஆனால் ஒரேதடவை வெற்றியுடன் போராடிய மக்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து கொண்டு விட்டனர். இரண்டாம் ஜேம்ஸின் அடக்கு முறை ஆட்சியை ஒரு கட்சியாரே எதிர்த் தனராயினும் நாட்டு மக்களின் பெரும்பான்மை ஆதரவு |