பக்கம் எண் :

குடியாட்சி79

அவர்கள் பக்கமிருந்தது, எனவே ஜேம்ஸ் எளிதில் அரசிருக்கையிலிருந்து அகற்றப்பட்டு அவர் புதல்வியான மேரியும் மருகரான மூன்றாம் வில்லியமும் அரசராயினர். வெற்றியுடன் மன்னரைத் தேர்ந்தெடுத்த மக்கள் எளிதாகத் தம் உரிமைகளை நிலைநாட்டவும் மன்னர் உரிமைகளை வரையறுக்கவும் சட்டங்களியற்றினர், இன்றைய ஆங்கில நாட்டரசியலமைப்பில் இச் சட்டங்கள் தலைமையான இடம் பெறுகின்றன.

   இச் சட்டங்களுள் உரிமைப் பகர்ப்பு (Bill of Rights) கிளர்ச்சிச் சட்டம் (Muting Act) , அரசர் வருவாய்ச சட்டம் முதலியவை தலை சிறந்தவை, இவற்றுள் உரிமைப் பகர்ப்பு முதல் சார்ல்ஸ் அரசர் காலத்தில் நிறை வேற்றப்பட்ட உரிமைக் கோரிக்கையின் (Petition of Rights) புதிய உருவேயாகும், இதில் முதல் சார்ல்ஸ், இரண்டாம் ஜேம்ஸ் முதலிய தன்னாண்மை மிக்க அரசர்கள் ஆட்சி முறைகளும் அக்கால வரி முறைகளும் கண்டிக்கப்பட்டன. உரிமைப் பகர்ப்பை மன்னர் தம் ஆற்றலால் மீறி நடந்தனர். ஆனால் ‘குருதியில்லாப் புரட்சி’ யின் பின் அங்ஙனம் அரசர் மீறாதபடி காக்க வேறு சட்டங்கள் ஏற்பட்டன, இவற்றுள் சிறந்தவையே கிளர்ச்சிக் சட்டமும் மன்னர் வருவாய்ச் சட்டமும் ஆகும். கிளர்ச்சிச் சட்டம் நாட்டில் ஏற்படு்ம் கிளர்ச்சிகளை அடக்கும் ஒரு நிலவரப் படை வைத்துக்கொள்ளும் உரிமையை அரசனுக்கு அளித்தது, ஆனால் இவ்வுரிமை நிலைபெற்ற உரிமையாக அளிக்கப்படவில்லை, அது சில ஆண்டளவுக்கே உரிமை யளிப்பதாயிருந்தது, ஆகவே அரசன் மன்றத்தை அடிக்கடி கூட்டாமல் படைவலியுடன் ஆனால் முடியாது, இதனுடன் மன்னர் வருவாய் வகை