பக்கம் எண் :

80குடியாட்சி

யிலும் மாறுதல் செய்யப்பட்டது. இதற்கு முன்னெல்லாம் ஒவ்வோர் அரசர் ஆட்சித் தொடக்கத்திலும் அவர் வாழ்நாள் முழுமைக்கும் அவர் வருமானம் வரையறை செய்யப்பட்டுச் சட்டம் இயற்றப்பட்டது, இதனால் அரசியல் மன்றத்தை ஆட்சித் தொடக்கத்தில் மட்டும் கூட்டிப் பின் கூட்டாமலே அவர்களால் ஆள முடிந்தது, ஆனால் இப்போதோ செலவின் ஒரு சிறு பகுதி மட்டுமே வாழ்நாள் முழுமைக்கும் நிலவர உரிமையாக அளிக்கப்பட்டது மீந்த பெரும்பகுதியும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அரசர் வருமானச் சட்டம் வரையறுத்தது.

   மேலும் உரிமைப் பகர்ப்பின்படி அரசன் கத்தோலி கனாயிருக்கவோ கத்தோலிக்க மாதை மணஞ் செய்வனாக இருக்கவோ கூடாது என்றும் வரையறுக்கப்பட்டது. இவ்வரையறை இன்றும் நடை முறையிலிருகிறது, பெரும்பான்மை புரோட்டஸ்டாண்டுகள் (சீற்திருத்த சமயச் சார்பானவர்கள்) ஆன இங்கிலாந்து மக்களின் சமய உரிமை இங்ஙனம் காக்கப்படினும் குருக்களைப் பற்றியவரை படிப்படியாக் பழைய சமயக்கட்டுப்பாடுகள் விலக்கப்படலாயின, வில்லியம் ஆட்சியிலேயே முழுக் கத்தோலிக்கர்களும் முழுமுன்னேற்றக் கருதுடைய புரோட்டஸ்டாண்டுகளும் நீங்கலாகப் பிறருக்கு சமயவாழ்வில் தன்னாண்மை தரும் சமய ஒப்புரிவுச் சட்டம் (Toleration Act) ஒன்று நிறை வேறிற்று, படிபடியாகப் பின்னாட்களில் முற்போக்குமிக்க புரோட்டஸ்டாண்டுகள் கத்தோலிக்கர் யூதர் ஆகியவர்களுக்கும் ஒப்புரவு உரிமைகள் தரப்பட்டன.