| ஆங்கில அரசியல் வளர்ச்சியில் மன்னர் உரிமைகளின் வரையறையைவிடக்கூடச் சிறப்புடைய ஒரு பெரு நிகழ்ச்சி வில்லியம் ஆட்சியில் தொடக்கமுற்றது. அதுவே ஆங்கிலக் கட்சிஅரசியல் முறையாகும். ஆங்கில நாட்டு வரலாற்றில் அரசயிலுரிமைப்போர்க் காலத்தில் தான் நாட்டு மக்களிடையே தெளிவான கட்சிப்பாகுபாடு ஏற்பட்டது, இவை லங்காஸ்டிரியர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மன்னர் குடியினரின் அரசுரிமைக்கான போராட்டக்கட்சிகள் போன்றவை அல்ல ;குடிமக்கள் அரசியல் உரிமை மேம்பட்டதா? மன்னர் அரசியல் உரிமை மேம்பட்டதா? என்பதைப் பற்றி எழுந்த கட்சிகள் ஆகும். இரண்டாம் சார்ல்ஸ் மன்னரை மீட்டும் அழைத்த போது ஓரளவு இக்கட்சி வேற்றுமை ஓய்வுற்றதுபோல் காணப்பட்டது, ஆனால் அரசன் தம்பியாகிய இரண்டாம் ஜேம்ஸ் அரசுரிமையை விலக்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தபோது மீண்டும் அக்கட்சி புத்துருப்பெற்றது. அவ்வேண்டுகோளைக் கொண்டுவந்த கட்சி பழைய மன்னர் கட்சியையும் அதனை எதிர்த்த கட்சி பழைய அரசயில் மன்றக் கட்சியையும் நினைவூட்டும். இரண்டாம் ஜேம்ஸ் அரசிருக்கையிலிருந்து நீக்கப்பட்டபின் முன் அவரை ஆதரித்த கட்சியில்கூட ஒரு சிலரே அவரிடம் பற்றுடையவராயிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் வட ஸ்காத்லாந்திலுள்ள மேட்டுநில மக்களாவர். இவர்கள் பிற்காலத்தில் ஜக்கோபைட்கள் என்ற பெயறால் அரசியலைக்கவிழ்க்கும் நாட்டுப் பகைவருடன் ஒப்பாக வெறுக்கப்பட்ட குழுவினராயினர். ஜேம்ஸை ஆதரித்த கட்சியில் பெரும்பாலோர் அவர் அரசுரிமையை ஆதரியாமல் ஓரளவு அவர் கொள்கையை மட்டுமே |