பக்கம் எண் :

82குடியாட்சி

மேற்கொண்டனர். இவர்கள் டோரிகள் என்றும் வில்லியம் அரசரைக் கொண்டுவந்தவர்கள் விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பது முன்னரே கூறப்பட்டது.

   மூன்றாம் வில்லியம் அரசர் ஒரு கட்சிச் சார்பாகவே இங்கிலாந்தின் அரசுரிமையை ஏற்றாரென்றாலும் விரைவில் கட்சிச் சார்பிலிருந்து விடுபட்டு நாட்டுப் பொதுத்தலைவனாயிருக்க எண்ணங்கொண்டார். ஆகவே அவர் தம்மை முதலில் ஆதரித்த விக்குக் கட்சியினரிடையிலிருந்து மட்டுமல்லாமல் டோரிக் கட்சியினரிடையிலிருந்தும் அமைச்சர்களைப் பொறுக்கி எடுக்க முற்பட்டார். ஆனால் தெற்கும் வடக்குமாயிருக்கும் இருவேறு கட்சிகளைச் சார்ந்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு அவர் என்னதான் செய்தல் முடியும்? ஆகவே அவர் தம் முதற்கருத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு கட்சியிலிருந்தே அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கலானார், அமைச்சர்கள் அரசியல் மன்றில் செல்வாக்குடைய வர்களல்லாதவராயிருந்ததால் அரசியல் மன்றத்தின் ஆதரவு அரசனுக்கு இல்லை. குருதியில்லாப் புரட்சிக்குப் பின் அவ் ஆதரவின்றி அரசன் தனித்தாட்சி புரிவதும் இயலுவதில்லை. எனவே மன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கொண்ட கட்சியிலிருந்தே அமைச்சரரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது, இவ்வழக்கம் நாளடைவில் வேரூன்றி நிலை பெற்று பிரிட்டிஷ் அரசியலின் எழுதாச்சட்டங்கள் அல்லது மரபுகளுள் ஒன்றாகிவிட்டது. ஆங்கில அரசியலமைப் பின் உயிர்நிலைப் பண்பாகக் கருதப்படும் அமைச்சர் குழு அமைப்பின் வளர்ச்சியில் இக்கோட்பாடு முதற்படியான வளர்ச்சி முறையைக் குறிப்பதாகும். 1696-ல் மூன்றாம் வில்லியம் அமைத்த விக் அமைச்சர் குழுவே ஆங்கில அர