| சியல் மன்ற வரலாற்றில் முதல் ஆட்சி உரிமைபெற்ற அமைச்சர் குழு என்னலாம். ஆயினும் இரண்டாம் சார்ல்ஸ் அரசர்ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட விக் அமைச்சர் குழுவாகிய ஜுண்டோ (Junto) வை இதற்கு ஒரு முன்மாதிரி என்னலாம். அமைச்சர் குழுவமைதியின் இரண்டாவது வளர்ச்சிப்படி அமைச்சர் ஒருமைப்பாடும். கூட்டுப் பொறுப்பும் ஆகும். இரண்டாம் சார்ல்ஸ் அரசர் ஆட்சியிலேயே அமைச்சர் ஒருவர் கருத்து வேறுபாடுடையவரானால் குழுமுழுமையும் கலையும் வழக்கம் இருந்ததெனினும் அது இன்றியமையா ஏற்பாடாகவில்லை. உண்மையில் அதனை இன்றியமையா ஏற்பாடாக்கிய பெருமை முதலாம் ஜார்ஜ் அரசர் காலத்தில் முதல் அமைச்சராயிருந்தவால்போல் என்ற பெரியாரதேயாகும். வில்லியம் காலமுதல் சிலசமயம் விக்குகளும் சில சமயம் டோரிகளும் வன்மையுடையவராயினர். வில்லியம் ஆட்சியின் இறுதியிலும் ஆன் ஆட்சியிலும் பெரும்பாலும் டோரிகளே மீண்டும் தலைமைநிலைக்கு வந்தனர். வில்லியம், மேரி ஆகியவர் பிள்ளையற்றவராதலால் அவர்களுக்குப் பின்மேரியின் தங்கை ஆன் அரசியானாள். அவளும் பிள்ளையில்லாது போயினள். அரசுரிமைக்கு ஆனுக்குப் பின் உரிமையுடைய பல அண்மை உறவினர் கத்தோலிக்கராயிருந்தனர். சட்டப்படி கத்தோலிக்கர் அரசராக முடியாதாயினும் எங்கே கிளர்ச்சி வலிமையால் அரசாட்சி அவர்கள் கையில் சிக்கிவிடுமோ என்று அஞ்சிய ஆங்கில மக்கள் மிகத் தொலைவான உரிமையையே யுடைய ஹனோவர் முதன் மகனான ஜார்ஜே |