| (George, Elector of Hanover) அரசனாக வரவேண்டும் எனச் சட்டம் வகுத்தனர். இவர் முதலாம் ஜேம்ஸின் புதல்வியான எலிஜபெத்து, அவள் கணவன் பாலட்டைன் முதன் மகனார் பிரடெரிக் ஆகியவரின் மகள் பிள்ளையாவர். தாயின்தாய் வழியில் மட்டுமே இவர் ஆங்கில நாட்டுடன் தொடர்புடையவர். இந்தஹானோவர் குடியினர் அரசியல் மன்றத்தார் விருப்பத்தால் அரசராயினும் இரண்டு தலைமுறை வரை பழக்க வழக்கங்களிலும் பேச்சிலும் முற்றிலும் ஜெர்மானியராகவே இருந்தனர். ஆங்கில மொழி பேசவோ ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்களையறியவோ செய்யாத இவர்கள் பெரும்பாலும் ஆட்சிப் பொறுப்பை முற்றிலும் அமைச்சர்களிடமே விட்டுவிட நேர்ந்தது. தற்செயலாக நேர்ந்த இந்த நிலைமை ஆங்கில அரசியல் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பெரிய நற்பேறாக முடிந்தது. பெயரளவிலும் எழுத்து வடிவில் சட்டத்தின் படியும் அமைச்சர்கள் அரசனால் அமர்வுபெற்று அரசனுக்கே இன்றளவும் பொறுப்புடையவராயிருக்கின்றனர். ஆனால் முதலிரண்டு ஹனோவரிய அரசர் (முதலாம் இரண்டாம் ஜார்ஜு கள்) காலமுதல் உண்மையில் அவர்கள் அரசியல் மன்றத்திற்கே பொறுப்புடையவர்களாகவும் அதன் விருப்பு வெறுப்பினாலேயே அமர்வும் நீக்கமும் பெற்றவர்களாகவும் ஆயினர். அத்துடன்மட்டு மன்ற மன்றத்தில் விருப்பம் அவர்களை ஒரே குழுவாக அரசன் செயலுக்குப் பொறுப்புடையவர்களாகக் கொண்டு நின்றதனால் அவர்களிடையே கூட்டுப் பொறுப்பும் வளரலாயிற்று அமைச்சர் குழுவமைதியின் இவ்விரு |