| கூறுகளும் இரண்டாம் சார்ல்ஸ் அரசர் காலத்திலேயே வித்தூன்றியவையாயினும் வில்லியம் ஆன் ஆகியவர்கள் அரசாட்சியில் குருதியில்லாப் புரட்சியின் பயனாக உரம் பெற்று முதலிரண்டு ஹனோவரியரின் ஆட்சிக் காலங்களில் வேரூன்றி ஆங்கில அரசியலின் உயிர்நிலை அடிப்படையாக நிலைபெற்றன. இதேசமயம் அமைச்சர் குழுவின் உறுப்பினர் பொதுப் பேரவையினின்றுமே தேர்ந்தெடுக்கப் பட்டதனாலும்; அதற்கே அவர்கள் பொறப்புடையவராய் அதன் ஆற்றலுக்கே கட்டுப்பட்டவராயிருந்ததனாலும்; அரசர் பெயரால் அமைச்சர் ஆட்சியை நடத்துவதற்கு உயிர்நிலை வேண்டுதலான பொருள்வருவாயும் வரி பிரித்தலும் அதே பொதுப்பேரவையின் கையிலிருந்ததனாலும் பொதுப்பேரவையே நாட்டின் பேரவையாக வளர்ச்சியடைந்தது பெருமக்கள் அவை இதற்குமாறாகப் பல வகையிலும் ஆற்றலும் உரிமைகளும் இழந்து வந்தது. வில்லியம், ஆன் முதலியவர்கள் ஆட்சிக் காலங்களில் அரசர், பெருமக்கள் அவையில் வளாச்சியடைந்து வரும் கட்சிக் கெதிராக வலிவு தேடிய காலத்தில் புதிய பெருமக்களை ஆக்கவும் முற்பட்டனர். இதனால் பெருமக்கள் பேரவை அரசர் கையிலும் அவ்வரசர் பெயரால் ஆட்சி நடத்தும் நடைமுறைக் குழுவாகிய அமைச்சர் குழுவின் கையிலும் இறுதியில் அவ்வமைச்சர் குழுவினை இயக்கிய பொது அவையின் கையிலும் ஒரு பொம்மையாக மாறிவந்தது. ஆன் ஆட்சிக்குப்பின் இரண்டாட்சிகளிலும் (1714 முதல் 1761 வரை) டோரிகளின் ஆற்றலும் புகழும் மங்கியிருந்தன. விக்குகள் மேலோங்கியிருந்தனர். தொடக் |