பக்கம் எண் :

86குடியாட்சி

கத்தில் விக்குகளின் தலைவராய் டௌன்ஷென்ட் என்பவரே முதலமைச்சராயிருந்தார். ஆனால் அவர் மன்னருடன் இணைந்து வெளிநாட்டு அரசியலிலும் போரிலும் பெரிதும் ஈடுபட்டதுடன் ஆங்கில மக்களுக்கு ஐயமும் கலவரமும் உண்டுபண்ணும் வகையில் மறைவான உடம் படிக்கைகளிலும் கலந்துகொண்டனர். பொருளமைச்சராயிருந்த அவர் மைத்துனர் ராபர்ட் வால்போல் வெளி நாட்டுப் போர்களை வெறுத்தவர். இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளின் பூசல்களில் கலக்காமல் ஒதுங்கி நின்று அமைதியுடனிருந்தால்தான் அது வாணிபத்திலும் கைத் தொழிலும் சிறந்தோங்க இடமுண்டு என்று அவர் எண்ணினார். அவர் எதிர்ப்பால் 1717 முதலே விக்குக் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1721-ல் வெளிநாட்டுக் காரியங்களிலும் உள்நாட்டுச் செய்திகளிலும் மக்களின் எதிர்ப்புக்கு டௌன்ஷென்டு ஆளாகவே அவர் சார்பான விக்குக் கட்சி வீழ்ச்சியுற்றுப் புதிய விக்குக் கட்சியின் தலைவராய் வால்போல் முதலமைச்சர் நிலையேற்றார்.

   டௌன்ஷென்டுக்கு உள் நாட்டில் எதிர்ப்பை உண்டுபண்ணிய நிகழ்ச்சி தென்கடற் குமிழி’ எனப் பிற்காலத்தில் ஏளனமாகக் குறிப்பிடப்பட்ட தென்கடல் வாணிபக் கழகத்தின் முறிவு ஆகும். சென்னையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதுமக்கள் சிறுபொருள் திரண்ட பெருங்குவையை விழுங்கி எப்பமிட்ட அர்பத்நாட் கழகத்தைப்போல இது ஆங்கில மக்களில் எல்லா வகுப்பினரிடையேயும் பொருளிழப்பையும் திண்டாட்டத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணிற்று. வால்போல் பொருளியலறிஞர்; திறமையான ஆட்சியாளர். அதனோடு அவர் அந்நாளைய நிலையைநன்