| கறிந்தவர். பழங்கால நிலக்கிழமையின் வாழ்வு முறை நீங்கி வாணிகக் கைத்தொழில் துறைகளில் அறிவியல் புரட்சி ஏற்படுத்தும் புதிய ஊழி தொடக்கமுற்றது. அக்காலமே பழைய வாழ்வின் அழிவிலிருந்து புது வாழ்வு பிறப்பதற்கு முற்பட்ட இரண்டுபட்ட நிலையில் ஏற்படும் வாழ்வியல் பொருளாதாரக் குழப்பங்களனைத்தையும் வால் போல் திறம்பட அமைத்து ஒழுங்குபடுத்தி ஆங்கில மக்கள் ஆதரவைப்பெற்றார். அத்துடன் அரசியல் நடைமுறையிலும் மற்ற அமைச்சர்களை ஒருமைப்படுத்தி அமைச்சர் குழுவாட்சி முறைக்கும் நன்கு அடிகோலினார். இங்கிலாந்தின் திறமிக்க முதல் தலையமைச்சர் இவரேயாவர் காலத்தின் இயல்புக்கும் கட்சித் தலைமையின் வேண்டுதலுக்கும் ஏற்ப அரசியல் வல்லுநர் என்ற முறையில் கைக்கூலி, செல்வர் குழுத்தலைமை, சூழ்ச்சிமுறை ஆகியவற்றை அவர் கையாண்டதுண்டாயினும் அக்காலம் அரசியல் வாழ்வின் முதிரா இளமைக்காலமாதலின் அவை புறக்கணிக்கத்தக்கவை. ஆனால் ஆங்கில அரசியல் பொருளியல் வாழ்வுக்கும் அவற்றின் மூலம் உலக வாழ்வுக்கும் அவர் ஆற்றிய பணி ஒப்புயர்வற்றதாகும். ஒரு நாட்டின் வாழ்வில் பல துறைகளிலும் செயற் கரிய செய்யும் பெரியார் தோன்றி மக்களுக்குத் தலைமை தாங்கி நடாத்துவதுண்டு. அத்தகைய பெரியார்களுள் இருவகையினர் உளர். காலத்திற்கேற்ற தலைமைதாங்கிய பெரியார், காலத்துக்கு அப்பாற்பட்ட தலைமைத்திறனுடையார் என அவர்களை வகுத்துக் கூறலாம். கிராம்வெலும் வால்போலும் காலத்துக்கப்பாற்பட்ட பெரியார் எனக் கூறவேண்டும். கிராம்வெல் கண்ட அரசியல் கனாக்களை |