பக்கம் எண் :

குடியாட்சி89

களையே அமைச்சர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுதவியாலும் அரசியலாளர்களிடம் அந்நாளில் வழங்கிய கைக்கூலி, உயர் பணிதரல் முதலிய மறைவழக்கங்களின் உதவியாலும் மன்றத்தை வசப்படுத்தி அடக்கியாள எண்ணினார். மூன்றாம் வில்லியத்தையும் முதல் ஜார்ஜையும் கொண்டுவரக் காரணராயிருந்த முற்போக்கு அரசியல் மன்றக் கட்சியான விக்குகளைவிட முன் ஸ்டூவர்ட் அரசர்களை ஆதரித்தவர்களின் கால்வழியில்வந்த டோரிகளே அரசனின் இப்போக்குக்கு உடந்தையாயிருந்தனர். எனவே அவர் மீண்டும் அந்த டோரிகளிடையே தன் விருப்பத்திற்கு இணங்குபவர்களைத் தலைமை யமைச்சராகக் கொண்டு ஆளமுயன்றார். ஆனால் ஆங்கில அரசியல் வளர்ச்சி இத்தகைய நாடகத்துக்கு இடந்தரும் நிலையினின்று மிகுதொலைசென்றுவிட்டது. வரவர மன்னருக்கும் மன்னர் கையாட்களான அமைச்சர்களுக்கும் எதிர்ப்பு வளர்ந்தது. இவற்றினிடையே அமெரிக்க விடுதலைப் போர் எழுந்தது.

   மூன்றாம் ஜார்ஜ் அரசரும் அவர் அமைச்சர்களாகிய நார்த் பெருமக்கள் முதலியவர்களும் ஆங்கிலநாட்டிலேயே விடுதலைப்பற்றாளர்களை எதிர்த்தவர்கள். ஆங்கில நாட்டு அரசியல்தலைமைக்குக் கீழ்ப்பட்டிருந்த அமெரிக்கக் குடிகளுரிமைகளை அவர்கள் எங்ஙனம் ஆதரிப்பர் என்றுநாம் எதிர்பார்க்க முடியும்? ஆனால் காலத்தின் மாறுதல் அமெரிக்கக் குடியேற்றத்தாரை விடுதலையார்வத்தால் வலிமைப்படுத்தி ஒற்றுமைப் படுத்தியது. ஜார்ஜ் வாஷிங்டன் என்ற ஒப்பற்ற தலைவரின்கீழ் அவர்கள் தம் அரசியல் கிளர்ச்சியை ஒழுங்கான படைத்திற எதிர்ப்பாக்கி விடுதலைப் போர்செய்து வெற்றிபெற்றனர். அமெ