| ரிக்க நாட்டினர் விடுதலை, அஃதாவது ஆங்கிலநாட்டார் அமெரிக்க நாட்டின்மீது செலுத்திய ஆட்சியை இழந்தமை ஆங்கிலமக்களைத் தட்டியெழுப்பிற்று. தம் அரசர் விடுதலைக்கு எதிரிமட்டுமல்லர்; திறமுமற்றவர் என்று அது அவர்களுக்கு எடுத்துக் காட்டிற்று. மூன்றாம் ஜார்ஜின் தன்னாண்மை ஆட்சிக்கும் அவர் சார்பாளரான நார்த்பெருமகன் அமைச்சர் நிலைக்கும் இது சாவுமணியாயிற்று. அமெரிக்கக் கிளர்ச்சியின்போது அமெரிக்கக் குடிமக்கள் கோரிக்கையை ஆதரித்துநின்ற ஆங்கில பெருந்தலைவர் இருவர். ஒருவர் சாதம் மோகமகனான (மூத்த) வில்லியம் பிட் என்பவர். இன்னொருவர் ஆங்கிலநாட்டின் ஒப்புயர்வற்ற சொற்பொழிவாளரான பர்க் என்பவர், இவர்களில் முன்னவரை அரசர் முதல் அமைச்சராக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் அவர் அரசரைப் போல அமெரிக்கரை எதிர்க்கவும் விரும்பாமல் விக்குகளைப்போல் அவர்கள் விடுதலையையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை மீட்டும் ஆங்கிலப் பேரரசில் சேர்க்க விரும்பினதால் பணியேற்க முடியவில்லை. அதனோடு சின்னாட்களுக்குள் அவர் உயிர்நீத்தும்விட்டனர். அமெரிக்க விடுதலைப்போர் ஆங்கிலப் பேரரசை ஒருபுறம் ஓரளவு கலைப்பதாயிருந்தாலும் இன்னொருபுறம் அதனை வேறுபக்கம் திருப்பிப் புத்துயிர் தருவதாயிருந்தது. அமெரிக்க நிலத்தில் ஆங்கிலப்படைகளைகள் தோற்ற பின் இனிப் பேரரசின் கடல்கடந்தபகுதிகளை விடாதிருக்க வேண்டுமானால் கடலாற்றல் மிகுதியாக வேண்டுமென்றும் குடியேற்ற நாடுகளிடம் குறுகிய தன்னல மனப்பான்மையை முந்துறக் காட்டல் கூடாதென்றும் ஆங்கில |