பக்கம் எண் :

குடியாட்சி91

மக்கள் உணர்ந்தனர். இவற்றின் பயனாக ஆங்கில நாட்டுக் கடற்படை வன்மைபெற விரிவுபடுத்தப்பட்டது. அமெரிக்கக் கூட்டுறவு நாட்டின் (United states of America) இழப்பிற் கீடாக விரைவில் அதன் வடக்கில் கானடா பிரிட்டிஷ் ஆட்சிக்குள் ஒன்றுபடுத்தப்பட்டது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் கைமேலோங்கி பிரிட்டிஷ் ஆட்சி விரிவுடத் தொடங்கிற்று. ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, தென்ஆபிரிக்கா ஆகிய குடியேற்றநாடுகள் புதுவதாகத் தோன்றின. இவற்றுள் பிரிட்டன் மூன்றாம் ஜார்ஜின் கொள்கைகளை மீட்டும் பின்பற்றாது எச்சரிக்கையாக நடந்துகொண்டது.

   ஆனால் எப்படியும் அமெரிக்க விடுதலைப் போரின் அதிர்ச்சி ஆங்கிலப்பேரரசை மட்டுமின்றி உலக வரலாற்றையே மிகவும் தாக்கும் செயலாக நிலவாதிருக்க முடியவில்லை. அமெரிக்கரைக் கண்டு இங்கிலாந்தின் அரசியலின் கீழ்த் துயருற்ற அயர்லாந்து மக்கள் தாமும் விடுதலைபெறவிதிர் விதிர்த்தனர். அமெரிக்க மக்களின் விடுதலையியக்கத்தின் போது எடுத்தாண்ட புதிய கருத்துக்கள் கடுங்கோன்மையிலும் உயர்வகுப்பாரின் சுரண்டலிலும் கொடுமையிலும் கிடந்துழன்ற பிரஞ்சு நாட்டு ஏழை மக்கள் உள்ளத்தில் கிடந்து குமுறிப் பலவகைக் கனாக்களையும் செயலார்வத்தையும் தூண்டின. ஆங்கில நாட்டு அரசியலையும் மெய் விளக்க நூல்களையும் கற்ற ஃபிரஞ்சுப் பேரறிஞர் இக்கனாக்களுக்குச் சிறகுதந்து மக்கள் வாழ்வு, அரசியல், பொருளியல் ஆகியவை பற்றிய புத்தாராய்ச்சி நூல்கள் வெளியிட்டனர். இவாக்ளுள் ரூசோ என்ற பேரறிஞர் எழுதிய வாழ்வியல் குழு ஒ்பந்தம் (Contract Social) மனித வகுப்பையே தட்டிஎழுப்பிய ஒரு சில நூல்களில்