| ஒன்றாக இடம் பெறத் தக்கதாகும். இதுபோல இன்னும் வால்தேர் முதலிய பிற அறிஞரும் தம் வெறித்த முற்போக்குக் கொள்கைகளை மக்களிடையே பரப்பினர். இவற்றின் பயனாக எழுந்த ஃபிரெஞ்சுப் புரட்சித் தீ 1785 முதல் புகைந்து 1792-ல் கனன்று 18-ம் நூற்றாண்டின் முடிவில் பேராரவாரத்துடன் ஜரோப்பிய நாடுகள் அனைத்தும் கிடுகிடுக்கும்படி வெடித்து நாலாபக்கமும் கங்குகளையும் வெப்பத்தையும் பரப்பிற்று. இறுதியில் இப்புரட்சியால் குழப்பமுற்ற ஃபிரான்சு நாடு நெப்போலியன் பேராவலுக் கிரையாய் அவன் காலடியில் பட்டுக்கிடந்த அவனுக்குப் பின் வந்த அரசர்கள் ஆங்கில அரசர் உதவியுடனும் பிற ஐரோப்பிய அரசர் உதவியுடனும் பெருமக்கள் ஆதரவுடனும் மீட்டும் உலகில் கடுங்கோன்மையைச் சிலகாலம் நிலைநாட்ட முயன்றனர். ஆயினும் இம் முயற்சிகள் முழுவதும் வெற்றி பெறாது வீழ்ச்சியடைந்தன. அதன் பயனாக ஒன்றன்பின் ஒன்றாக ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் போர்கள், புரட்சிகள், நாட்டுரிமை இயக்கங்கள் ஆகியவை மலிந்தார். ஃபிரெஞ்சுப் புரட்சியின் இப்பேராரவாரம் இங்கிலாந்தையும் தாக்காமலிருக்கவில்லை, ஃபிரெஞ்சுப் புரட்சிக் கழகங்கள் போன்ற புரட்சிக் கழகங்கள் ஆங்காங்கு நிலவின ஆயினும் அவற்றின் மட்டற்ற முற்போக்கால் முன் ஓரளவு முற்போக்குடைய தலைவர்கள்கூட வெருட்சியடைந்து பின்னடையலாயினர். இத்தகையோருள் அமெரிக்கப் புரட்சியை ஆதரித்தவரும் இந்தியாவில் ஆங்கில ஆட்சித் தலைவர் வாரன் ஹேஸ்டிங்ஸின் தன்னாண்மைப் போக்கை எதிர்த்தவரும் ஆன பெருஞ் சொற் செல்வர் பர்க்கும்ஒருவர். பிரெஞ்சுப் புரட்சியின் வெப்பமும் வேக |