எபிரேய, சமஸ்கிருத மொழிகள் வாயிலாகப் பரந்துள்ளன. குரங்கு, தந்தம், மயில் ஆகியவற்றுக்கான சொற்களும், கப்பல் என்பதற்கான சொற்களும் (தமிழ் நாவாய், சமஸ்கிருதம் கிரேக்கம் நவுஸ்) கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பரவின. | 'சிந்து' என்ற சொல் பாபிலோனிய மொழியில் ஆடையைக் குறித்தது. இது சிந்துவெளியில் செய்த ஆடையின் பெயராயிருந்தால் கூடத் தமிழகத் தொடர்பையே சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் நிலவழியாகச் சென்ற சொற்கள் மொழி முதல் 'ச' கரத்தை இழந்து விடுவது வழக்கம். அறிஞர் பி.டி. சீனிவாச அய்யங்கார் சிந்து என்பது துணி என்ற பொருளுடைய பழந் திராவிடச் சொல்லே என்று கருதுகிறார். இது தமிழில் கொடி என்ற பொருளையும் கன்னடதுளு மொழிகளில் துணி என்ற பொருளையும் தருகிறது. | வேத, ஆரிய, மொழியில் வாணிகச் சொற்கள் மட்டுமின்றி, அணு, அரணி (காட்டுச்சுள்ளி), கருமாரா (கருமான்), பலம் (பழம்), பீசம் (விதை), மயூரம் (மயில்), ராத்திரி (இரவு), ரூபம் (உருவம்), மீனம் (மீன்), நீரம் (நீர்), புஷ்பம் (பூ), நானா (பல=நால்+நால்), காலம், குடி, கணம் முதலிய சொற்களும் தமிழின மொழிகளிலிருந்து சென்று கலந்துள்ளன என்று மொழி நூலார் காட்டுகின்றனர். | கி.மு.1000 முதல் 800 வரை வாழ்ந்த *ஹோமர், ஹெஸீயட், பிண்டார் ஆகிய கிரேக்க கவிஞர் தமிழகச் செல்வத்தைப் புகழ்ந்துள்ளனர். கி.மு. 1000 முதல் 900 வரை பாலஸ்தீனின் முதலரசராயிருந்த தாவீதும், சாலமனும், தயர் நகரின் ஃவினீசிய அரசனானஹீரமும், தென்னாட்டு உவரிக்குக் கலங்களை அனுப்பி, முத்து, பொன், வெள்ளி, தந்தம், குரங்குகள் ஆகியவற்றைத் தருவித்தனர். சாலமன் சந்தனமும் மயிலம் தருவித்தான். |
| * Homer, Hesiad, Pindam | | |
|
|